Kathir News
Begin typing your search above and press return to search.

கோவில் விடுதியில் அசைவம் - அதிகாரிகள் அட்டகாசம், தூங்கும் அறநிலையத்துறை

திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான விடுதியில் கோவில் அதிகாரிகள் அசைவ உணவு உண்ணும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கோவில் விடுதியில் அசைவம் - அதிகாரிகள் அட்டகாசம், தூங்கும் அறநிலையத்துறை

KarthigaBy : Karthiga

  |  31 Aug 2022 3:00 PM GMT

திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான பக்தர்கள் தங்கும் விடுதியில் கோவில் அதிகாரிகள் சிலர் அசைவ உணவு சாப்பிடுவதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.


திருவள்ளூர் மாவட்டம் ஆறுபடைவீடுகளில் ஒன்றான ஐந்தாம் படைவீடாக விளங்கும் பிரசித்தி பெற்ற திருத்தணி பகுதியில் உள்ள அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து செல்கின்றனர்.

கோவிலுக்குச் சொந்தமான கார்த்திகேயன் இல்லம் தணிகை இல்லம் குடியிருப்பில் இருந்து கட்டண அடிப்படையில் பக்தர்களுக்கு விடுதி வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் விரதம் இருந்து தங்களது வேண்டுதலை நிறைவேற்ற மறுநாள் காலை த அபிஷேகத்தில் கலந்து கொண்டு தரிசனம் செய்வது மற்றும் மலைக்கோவிலில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வது போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.


உயர்பதவியில் இருக்கக்கூடிய கலைவாணன் மற்றும் வித்யாசாகர் இருவரும் அசைவ உணவாக சாப்பாடு சிக்கன் ,முட்டை, மீன் வருவல் போன்றவற்றை உணவருந்தும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த வீடியோ தற்போது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கோவில் குடியிருப்பு அறையில் தங்கும் விடுதிகள் அதிகாரிகள் சிலர் அசைவ உணவு சாப்பிடுவதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

குடியிருப்பு அறையில் பக்தர்கள் தங்கும் புனிதமான விடுதிக்குஅருகில் வந்து அறைகளில் அதிகாரிகள் அமர்ந்து அசைவ சாப்பாடு சாப்பிடும் அதிகாரிகள் மீது இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துளனர்.


Source-polimer news

Next Story
கதிர் தொகுப்பு
Trending News