Kathir News
Begin typing your search above and press return to search.

கோவில் பிரசாதத்தின் தரத்தை உறுதி செய்யும் நடவடிக்கை!

கோவிலில் வழங்கப்படும் பிரசாதத்தின் தரத்தை உறுதி செய்யும் வகையில் ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் பயன்படுத்த முடிவு.

கோவில் பிரசாதத்தின் தரத்தை உறுதி செய்யும் நடவடிக்கை!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  29 Dec 2021 1:00 AM GMT

கோவிலில் கடவுளுக்கு நெய்வேத்தியம் ஆக படைக்கப்படும் பிரசாதம் பிறகு பக்தர்களுக்கு மற்றும் அங்கு உள்ள ஏழைகளுக்கும் வழங்கப்படுகிறது. மேலும் கோவிலில் கொடுக்கப்படும் இந்த பிரசாதத்தை நம்பி, பல்வேறு மக்கள் உள்ளதாகவும் தெரிகிறது. எனவே அவர்களுக்கு கொடுக்கப்படும் பிரசாதத்தின் தரத்தை உறுதி செய்யும் வகையில், இந்து சமய அறநிலை இன் கீழ் உள்ள அனைத்து கோயில்களும் தற்பொழுது இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


கோயில் இணை ஆணையர்கள் மற்றும் செயல் அலுவலர்களுக்கு ஆணையர் ஜெ.குமரகுருபரன் அவர்கள் இதுகுறித்து பிறப்பித்த உத்தரவில் கூறுகையில், கோயில்களில் தயாரிக்கப்படும் உணவுப் பொருள்களின் தரத்தை உறுதி செய்யவும், தீபம் ஏற்றுவதற்கு தரமில்லாத நெய்யைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு ஜனவரி 1, 2022 முதல் அமலுக்கு வருகிறது. எனவே கோயில் பிரசாதங்கள் இல் ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் பயன்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


மேலும் இந்த ஒரு உத்தரவுக்குப் பிறகு இந்த நடவடிக்கையின் மூலம், மாநிலங்களில் உள்ள 1,200 கோவில்களுக்கு மட்டும் ஆவின் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் 150 - 250 டன் நெய் மற்றும் வெண்ணெய் விற்பனை செய்ய முடியும். இந்த முடிவை வரவேற்றுள்ள தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தைச் சேர்ந்த M. G. ராஜேந்திரன், ஆவின் நிறுவனத்துக்கு உதவ நடவடிக்கை எடுத்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் இடம் பெற்றிருப்பது பாராட்டத்தக்கது என்று அவர் கூறியுள்ளார்.

Input & Image courtesy: The hindu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News