Kathir News
Begin typing your search above and press return to search.

படு பயங்கரமான மரண ஏரி - எதனால் இந்த பெயர்? ஆச்சரியமான தகவல்

பொதுவாக ஏரி என்றால் நீர் நிறைந்து அனைவரும் தண்ணீர் பருகவும் பயன்படுத்தவும் ஏதுவாக உள்ளதாக இருக்க வேண்டும். ஆனால் ஒரு ஏரி கொடூரமான மரண ஏரியாக உள்ளது.

படு பயங்கரமான மரண ஏரி - எதனால் இந்த பெயர்? ஆச்சரியமான தகவல்

KarthigaBy : Karthiga

  |  30 July 2023 2:30 PM GMT

ஏரி என்றால் அதில் நிரம்பி இருக்கும் நீர் மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் பயன்படும். ஆனால் ஆப்பிரிக்காவில் இருக்கும் ஒரு ஏரி உயிர்களை கொடூரமாக கொள்ளும் 'மரண ஏரியாக' விளங்குகிறது. அங்குள்ள தாசானியாவில் அருஷப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் அந்த ஏரியின் பெயர் 'நாட்ரோன்'.


மூணு மீட்டர் ஆழமும் 56 கிலோ மீட்டர் அகலமும் 22 கிலோமீட்டர் நீளமும் கொண்து.இந்த ஏரியின் சராசரி வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ். அதனால் தண்ணீரில் எப்போதுமே அனல் கலந்திருக்கும். வெப்பநிலை இன்னும் அதிகரித்து நீர் ஆவியாகும் போது வெளிப்படும் சோடியம் கார்பனேட் ஏரியிலேயே படிந்துவிடும். இதனால் ஏறி நீரின் பி.ஹெச் அளவு 12 என்ற அளவிலேயே இருக்கும்.


ஏரியைச் சுற்றியுள்ள எரிமலைகளில் இருந்து வரும் வேதிப்பொருட்களும் கலப்பதால் தண்ணீர் ரசாயன மாற்றத்திற்கு உள்ளாகிறது. இந்த ரசாயன கலவை மாற்றம் தண்ணீர் பருக வரும் உயிரினங்களை மரணத்திற்கு ஆளாக்குகிறது. ஏரி தண்ணீரை பருகியதும் இறக்கும் உயிரினங்கள் நீருக்குள் மூழ்கினால் கடினமான கால்சிபைட் கல் போன்ற சிற்பங்களாக மாறிவிடும் என்ற கருத்தும் உலவுகிறது.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News