காஷ்மீர் பயங்கரவாதத்தின் 'code 130' - அமர்நாத் யாத்திரைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்!
காஷ்மீர் பயங்கரவாதத்தின் 'code 130' - அமர்நாத் யாத்திரைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்!
அமர்நாத் சிவன் பக்தர்கள் ஜூலை 21 முதல் புனித குகைக்கு சென்று தரிசம் செய்ய உள்ள நிலையில், அங்கு ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினர் விழிப்புடன் கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
காஷ்மீரில் பயங்கரவாதத்திற்கு எதிராக இராணுவம் செயல்படுவதால், தீவிரவாதிகள் அமர்நாத் யாத்திரையை குறிவைக்க வைத்து, காஷ்மீரில் நெடுஞ்சாலை எண் 44இல் யாத்திரீகர்கள் மீது தாக்குதல் நடத்தலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
அமர்நாத் சிவனை வழிப்பட இந்த முறை ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 03 வரை மக்கள் கூட்டம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, சுமார் 100 பயங்கரவாதிகள் தெற்கு காஷ்மீரில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். தெற்கு காஷ்மீரில், பயங்கரவாதிகளுக்கு எதிராக இராணுவம் ஒரு பெரிய பிரச்சாரத்தை நடத்தியுள்ளது. இது காஷ்மீர் பயங்கரவாதத்தின் 'code 130' என்றழைக்கப்படுகிறது.
கொரோனா காலம் காரணமாக, தினமும் 500 யாத்ரீகர்கள் மட்டுமே சிவபெருமான புனித குகையை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள். 55 வயதிற்குட்பட்டவர்கள் மட்டுமே பயணிக்க முடியும்.
பயணத்தின் போது கொரோனா தொடர்பான அனைத்து தேவையான வழிகாட்டுதல்களும் உறுதி செய்யப்படும். அமர்நாத் யாத்திரை தொடங்குவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர், தெற்கு காஷ்மீரின் குல்கம் இராணுவத்தால் மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.