சென்னையில் பயங்கரவாத தலைவன் அசதுல்லா ஷேக் கைது! தமிழகத்தில் எங்கெங்கு குண்டு வைக்க திட்டம்?
சென்னையில் பயங்கரவாத தலைவன் அசதுல்லா ஷேக் கைது! தமிழகத்தில் எங்கெங்கு குண்டு வைக்க திட்டம்?
By : Kathir Webdesk
வங்காள தேசத்தைச் சேர்ந்த தடை செய்யப்பட்ட ஜமாஅத் அல் முஜாஹிதீன் என்ற முஸ்லிம் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவன் அசதுல்லா ஷேக் என்ற ராஜா சென்னையில் இன்று கைது செய்யப்பட்டான்.
சென்னை, நீலாங்கரையில் 10 மாதங்களாக கட்டுமான தொழிலாளர் என்ற போர்வையில் பதுங்கி இருந்த, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அசதுல்லா ஷேக் என்ற ராஜாவை, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு போலீசார் இணைந்து கைது செய்தனர்.
சென்னை நீலாங்கரையில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முஸ்லிம் பயங்கரவாதி ஷேக் அசதுல்லா, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான்.
மேலும் அசதுல்லா ஷேக்கை ஹைதராபாத்திற்கும், பீகாருக்கும் அழைத்துச் சென்று விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
2013-ஆம் ஆண்டு, பீகார் மாநிலம் புத்தகயாவில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டு வெடிப்பில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்பட பலர் காயமடைந்தனர்.
இந்த குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டவர் அசதுல்லா ஷேக் என்பது குறிப்பிடத்தக்கது.
இவன் எதற்காக சென்னையில் கட்டுடமான தொழிலாளி போர்வையில் பதுங்கி இருந்தான். அவனின் கூட்டாளிகள் யார்? யார்? அவனுக்கு இங்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் யார்? யார்? தமிழகத்தில் எங்கெங்கு நாச வேலைகளை அரங்கேற்ற திட்டமிட்டு இருந்தான் போன்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.