தீவிரவாத தற்கொலை தாக்குதல் எதிரொலி - உச்சகட்ட பாதுகாப்பில் கொங்கு மண்டலம்
கோவையில் காரில் குண்டு வெடித்த சம்பவம் தொடர்பாக ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இன்னமும் காவல்துறை இது குறித்த அறிக்கையை முழுமையாக வெளியிடவில்லை.
By : Mohan Raj
கோவையில் காரில் குண்டு வெடித்த சம்பவம் தொடர்பாக ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இன்னமும் காவல்துறை இது குறித்த அறிக்கையை முழுமையாக வெளியிடவில்லை.
கோவையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே காரில் வெடிகுண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் மாருதி காரில் சிலிண்டர் விடுத்ததில் ஜமுசா முபின் என்பவர் பலியானார். இந்த சம்பவம் குறித்து ஆறு தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக முகமது தல்ஹா, முஹம்மது அசாருதீன், முகம்மது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில் மற்றும் முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய ஐந்து பேரை உக்கடம் போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் கோவையின் முக்கிய பகுதிகளான ஒப்பனக்கார வீதி, உக்கடம், காந்திபுரம், கிராஸ்கட் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். மத்திய துணை இராணுவத்தினரும் பல்வேறு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.