பி.எஸ்.எல்.வி ராக்கெட்டில் பயன்படுத்த புதிய பி.எஸ்-4 திரவ எஞ்சின் சோதனை வெற்றி!
பி.எஸ்.எல்.வி ராக்கெட்டில் பயன்படுத்த புதிய பி.எஸ்-4 திரவ எஞ்சின் சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக இஸ்ரோ கூறியுள்ளது .
By : Karthiga
பி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்படுகின்றன. இதில் தற்போது புதிதாக பி.எஸ்-4 என்ற பெயரில் புதிய எஞ்சின் தயாரிக்கப்பட்டுள்ளது .இது திரவ எஞ்சின் வகை ஆகும். இந்த வகை எஞ்சின் அடிட்டிவ் மேனுஃபாக்சரிங் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் சோதனை வெற்றிகரமாக அமைந்தது. இது பி.எஸ்.எல்.வி.ராக்கெட்டின் நான்காவது வகை எஞ்சின் ஆகும். மொத்தத்தில் இந்த என்ஜின் தயாரிப்பு நேரம் 60% வரை குறைகிறது.
தனியார் நிறுவனங்களால் இந்த என்ஜின் தயாரிக்கப்பட்டது .இது மகேந்திர கிரியில் உள்ள இஸ்ரோவின் புரொபல்சன் மையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இது வெப்ப சூழ்நிலையில் நடத்தப்பட்ட சோதனையாகும். இஸ்ரோ மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக அந்த எஞ்சினில் இன்ஜெக்டர் கருவி ஏற்கனவே சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த இன்ஜினில் நான்கு வகையான சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த நான்கும் வெற்றிகரமாக அமைந்தது. மொத்தம் 74 வினாடிகள் வரை இந்த சோதனை நீடித்தது. முழு தகுதிக்காக அந்த எஞ்சின் 665 வினாடிகள் சோதனை நடத்தப்பட்டது. எதிர்பார்த்தது போல் அதில் அனைத்து கருவிகளும் வெற்றிகரமாக செயல்பட்டது. இதை அடுத்து பி.எஸ்.எல்.வி ராக்கெட்டில் இந்த பி.எஸ்.4 இன்ஜினை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.