Kathir News
Begin typing your search above and press return to search.

கி.வீரமணியை துவசம் செய்த தாமரைக்கனி!வைரலாகும் மலரும் நினைவுகள்!!

கி.வீரமணியை துவசம் செய்த தாமரைக்கனி!வைரலாகும் மலரும் நினைவுகள்!!

கி.வீரமணியை துவசம் செய்த தாமரைக்கனி!வைரலாகும் மலரும் நினைவுகள்!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 Sep 2019 10:26 AM GMT



மிகச்சரியாக 20.7.1982 அன்று ஸ்ரீவில்லிபுத்தூர் அக்கிரகாரத்தில் ஒரு பிராமணர் கூட்டம். அவர்கள், மொத்தமாக கூடி தொகுதி எம்.எல்.ஏ தாமரைக்கனியிடம் புகார் அளித்தனர்.


அக்கிரகாரத்தில் தி.க.தலைவர் வீரமணி முதல்நாள் கூட்டம் போட்டிருந்தார். அந்த கூட்டத்தில் ஆண்டாள் பற்றியும், அந்தணர்கள் பற்றியும் அச்சில் ஏற்றமுடியா வண்ணம் அருவறுக்கத்தக்க வார்த்தைகளால் மேடையில் பேசியிருந்தார்.


அதை புகாராக தெரிவிக்க தாமரைக்கனி வீட்டில் ஒன்று கூடினர் பிராமணர்கள. அத்தனைபேரையும் அமைதிப்படுத்தினார் தாமரைக்கனி.


“எவன் என்ன பேசினாலும் உங்களுக்கு பக்கதுணையாக நானிருக்கிறேன்” என்றார் தாமரைக்கனி.


“வீரமணி இன்னும் வத்ராப்பில்தான் இருக்கிறான். இந்த வழியாதான் போகணும். கவலைப்படாம போங்க. நான் பார்த்துக்கறேன்” என்றார் தாமரைக்கனி.


அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆருக்கு டிரங்க்கால் போட்டார் தாமரைக்கனி. “தலைவா! நாளைக்கு நீங்க மதுரை வரவேண்டியிருக்கும். அத்தனை புரோக்கிராம்களையும் கேன்சல் பண்ணிடுங்க.” என்று தெளிவாக பேசிவிட்டு எம்.ஜி.ஆரின் பதிலை எதிர்பார்க்காமல் டிரங்க்காலை துண்டித்துவிட்டார் தாமரைக்கனி.


பதறிப்போன எம்.ஜி.ஆர், தாமரைக்கனி யை கண்காணிக்கும்படி ராமநாதபுரம் கலெக்டருக்கும், (அப்போ விருதுநகர் மாவட்டம் உதயமாகவில்லை) மதுரை கலெக்டருக்கும் உத்தரவிட்டிருந்தார்.


தாமரைக்கனி தலைமறைவாகி விட்டார். அவர் எங்கே இருந்தார் என்று 2 மாவட்ட கலெக்டர்களுக்கும் தெரியவில்லை.


இதற்கிடையே வத்ராப் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு கி.வீரமணி வந்துகொண்டிருந்தார். மம்சாபுரம் விலக்கு அருகே சுமார் 50 பேர் தி.கவின் கறுப்பு சட்டையுடன்,தி.க.கொடியை ஏந்திக்கொண்டு, “தந்தை பெரியார் வாழ்க! இனமான காவலர் வீரமணி வாழ்க!” என்று கோஷம் போட்டபடி நின்றனர்.


அவர்களை தி.க.காரர்கள் என்று நினைத்து காரை விட்டு இறங்கினார் வீரமணி. அடுத்த நொடி, கொடியை அகற்றினர்.அனைவர் கைகளிலும் இரும்பு கம்பிகள்.


வீரமணிக்கு வரலாறு காணாத அடி. அதற்கு முன்பும், அதற்கு பின்பும் அவர் அந்தளவு அடி வாங்கியதில்லை என்கிறார்கள்.


மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வீரமணி அட்மிட் செய்யப்பட்டார். வாய் கோணி இருந்தது. தலை கவிழ்ந்து இருந்தது. இடுப்பு திரும்புவதற்கே ஒரு வாரமானது.


அப்போது மதுரைக்கு வந்த எம்.ஜி.ஆரை வரவேற்க விமான நிலையம் சென்றார் தாமரைக்கனி. “மலர் வளையமா? மலர் மாலையா?” என்று கேட்ட எம்.ஜி.ஆரிடம், “இப்போதைக்கு மலர் மாலை போதும். இந்த நிலை தொடர்ந்தால் வீரமணிக்கு மலர் வளையம் வைக்கவேண்டியிருக்கும்” என்றார் தாமரைக்கனி.


இந்த சம்பவத்தை அப்போது பரபரப்பாக பேசபட்டது.


இப்போது சமூக வலைத்தளங்களில் மீண்டும் விஸ்வ ரூபம் எடுத்து வைரலாகி வருகிறது.


http://tamilan-superpowerindia.blogspot.com/2019/02/blog-post_42.html



Next Story
கதிர் தொகுப்பு
Trending News