குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த தங்கமங்கைகள்!
டெல்லியில் இன்று நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக ராணுவ வீராங்கனைகளும் இடம் பெற்றுள்ளனர்.
By : Karthiga
நாட்டின் 75-வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி டெல்லி கடமை பாதையில் நடைபெறும் நிகழ்வில் ஜனாதிபதி திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். இதனை தொடர்ந்து முப்படைகள் அடங்கிய அணிவகுப்பு மரியாதை நடக்கிறது. இதில் முப்படைகளில் பணிபுரியும் அனைத்து பெண்கள் பிரிவும் பங்கேற்கிறது. இதனை முன்னிட்டு அவர்களுக்கு அணிவகுப்பு பயிற்சி டெல்லியில் அளிக்கப்பட்டது. அணிவகுப்பில் பங்கேற்கும் பெண்கள் பிரிவில் தேனி மாவட்டம் சேர்ந்த கனி என்பவரின் மகள் சியாமிகா கனியும் ஒருவர்.
ராணுவப்படையில் உள்ள இவருடன் கடற்படையில் இருக்கும் கன்னியாகுமரியை சேர்ந்த அபிநயா, கோகிலா, அகிலா, தூத்துக்குடியைச் சேர்ந்த கோமதி , வினுஷா, மதுரையைச் சேர்ந்த சிவபாரதி ,வேலூரைச் சேர்ந்த சுவேதா, திருவண்ணாமலையைச் சேர்ந்த பவித்ரா மற்றும் சென்னையைச் சேர்ந்த சந்தியா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். ராணுவம் மற்றும் கடற்படையில் சேர்ந்து பயிற்சி முடித்த உடனே குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க இவர்கள் தேர்வு பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ அவில்தார் சிலம்பரசன் உள்ளிட்டோர் குடியரசு தின அணிவகுப்பு பயிற்சி அளித்தனர்.
SOURCE :DAILY THANTHI