Kathir News
Begin typing your search above and press return to search.

அந்த காலம் அது.. அது... வசந்த் & கோ காலம் – குமுறும் குமரி மக்கள்! வைரலாகும் வீடியோ!

அந்த காலம் அது.. அது... வசந்த் & கோ காலம் – குமுறும் குமரி மக்கள்! வைரலாகும் வீடியோ!

அந்த காலம்  அது.. அது... வசந்த் & கோ காலம் – குமுறும் குமரி மக்கள்! வைரலாகும் வீடியோ!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  15 Sep 2019 4:23 AM GMT


கன்னியாகுமரி மாவட்டம், ஒரு புறக்கணிக்கப்பட்ட மாவட்டம் என்று சொன்னால் அது மிகச் சரியாக இருக்கும். உதாரணமாக இந்த மாவட்டத்தில் உள்ள சாலைகள் சீர் கெட்டு, குண்டும் குழியுமாகதான் கடந்த பல ஆண்டுகளாக கிடந்தன. ஆறு சட்டமன்றத் உறுப்பினர்கள் இந்த மாவட்டத்தில் இருந்தும் ஒருபிடி மண்ணைக்கூட அள்ளி போடவில்லை. இதுதான் உண்மை நிலவரம்.


சாலைகளுக்கு இந்த நிலை என்றால் மற்ற அடிப்படை வசதிகள் பற்றி கேட்கவே வேண்டாம். யார் செய்த புண்ணியமோ கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட பொன்.இராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். அதன்பிறகுதான், குமரி மாவட்டத்திற்கு விமோசனம் கிடைத்தது. அவர் தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை முழுமையாக பயன்படுத்தி இந்த மாவட்டத்திற்கு பல நன்மைகளை செய்துள்ளார்.


இந்த மாவட்டத்தில் உள்ள 144 மாநில சாலைகனை, ரூ.4000 கோடி மத்திய அரசின் நிதியைக்கொண்டு செப்பனிட்டிருந்தார். மதுரையிலிருந்து திருவனந்தபுரம் வரை, இரட்டை ரயில் பாதை திட்டத்தை கொண்டு வந்தார்.


இந்த ரயில்வே பாதை அமைக்கும் பணியில் மாநில அரசின் நிதி பங்களிப்பு வேண்டும். ஆனால் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்ய இயலாது என்று கைவிரித்த நிலையில், அந்த நிதியை மத்திய அரசின் நிதியில் இருந்து ஒதுங்கீடு செய்து செயல்படுத்தினார்.


களியக்காவிளையில் இருந்து திருவனந்தபுரம் வரை கேரள மாநிலத்தை சார்ந்த பகுதி. கேரளப்பகுதியில் கேரள முதல்வர் பிரணாயி விஜயன் அரசாங்கம் நிதி ஒதுக்க இயலாது என்று முட்டுக்கட்டைப்போட்டது. பொன்.இராதாகிருஷ்ணன் முயற்சியால் அதற்கும் மத்திய அரசு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்து செயல்படுத்தி உள்ளார்.


இதுபோல நரிக்குளம் பாலம், சுசீந்திரம் பாலம், பார்வதிபுரம் மேம்பாலம், மார்த்தாண்டம் மேம்பாலம் போன்றவை பொன்.இராதாகிருஷ்ணனின் காலத்திற்குப் பிறகும் அவருடைய பெயரை சொல்லிக்கொண்டே நிற்கும். கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் வரை நாற்கர சாலை, காவல்கிணற்றில் இருந்து நாகர்கோவில் வரை நாற்கர சாலை , இவையெல்லாம் எந்த ஒரு எம்பியாலும், எந்தகாலத்திலும் செயல்படுத்த முடியாதவை.


இது போல ஏராளமான சிறு குறு பாலங்கள், சாலைகளை, 5 ஆண்டுகளில் பொன்.இராதாகிருஷ்ணன் அமைத்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களின் சந்திப்பில் உள்ள உயர்கோபுர விளக்குகள் 90 சதவீதத்திற்கு மேல், பொன்.இராதாகிஷ்ணனால் அமைக்கப்பட்டவைதான்.


இவ்வளவு நல்லவைகளை செய்த ஒரு நல்ல மனிதன் என்ற முறையில் பொன்.இராதாகிருஷ்ணனுக்குத்தான் இந்த தொகுதி மக்கள் வாக்களிப்பார்கள் என்றுதான் அனைவரும் நினைத்தார்கள்.


இந்த நல்ல மனிதனுக்கு ஓட்டுப் போடக்கூடாது என்று தேர்தலுக்கு முன்பாக சுமார் 6 மாதங்களுக்கு முன்பிருந்தே பிரச்சாரம் செய்தார்கள்.


இதை உங்களால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆகவேண்டும். மதவெறிபிடித்த கும்பல்கள் செய்தார்கள்.


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிறிஸ்தவ சர்ச்சுகளிலும் ஜெபம் செய்தார்கள். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்றும், ஒவ்வொரு சர்ச்சுகளிலும் பொன்.இராதாகிருஷ்ணனுக்கு ஓட்டு போடக்கூடாது என்று பாதிரியார்கள் விஷத்தைக் கக்கினார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக பொன்.இராதாகிருஷ்ணனுக்கு ஓட்டுப்போட்டால் சர்சுகளை இடித்துவிடுவார்கள் என்று பாதிரியார்கள் வஞ்சகமாக நெருப்பை பற்றவைத்தனர்.


அவர், 5 ஆண்டுகளில் வெளிநாட்டு சிறைகளில் சிறைபட்ட 296 மீனவர்களை மீட்டுவந்துள்ளார். இவரது முயற்சியால் குமரி மாவட்டத்தில் சுமார் 4 லட்சம் பேருக்கு மத்திய அரசின் பிரதமர் காப்பீட்டுத் திட்டம் வழங்கப்பட்டுள்ளது. ஏராளமான பேருக்கு இலவச கியாஸ் இணைப்புகள. வழங்கப்பட்டிருக்கின்றன. பிரமர் மோடியின் இலவச வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஏராளமானோருக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன.


இவை எதையுமே மதம் பார்த்து இந்த மனிதன் செய்ததில்லை. இவை அனைத்தையும், இந்த மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிறிஸ்தவரும் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் அவருக்கு ஓட்டு போடக்கூடாது என்று உள்நோக்கத்தோடு பாதிரியார்கள் சொன்னதை கேட்டு முடிவெடுத்தார்கள் என்றால் மதவெறி எந்த அளவிற்கு தூண்டப்பட்டுள்ளது என்பதை புரிந்துகொள்ளலாம்.


மதம் படித்த ஜெகத் கஸ்பார் முதல் ஐஏஎஸ் படித்த தேவ சகாயம் வரை அனைவருமே மதவெறியின் உச்சத்தில்தான் செயல்பட்டனர், செயல்படுகின்றனர். மதசார்பற்ற இந்த நாட்டில் இத்தகைய மதவெறி சரியானதா? என்பதை கிறிஸ்தவர்கள் சிந்திக்க வேண்டிய மிக முக்கியமான ஒன்று.


நல்லது செய்த பொன்.இராதாகிருஷ்ணனுக்கு ஓட்டுபோடக்கூடாது என்று பாதிரியார்கள், சர்ச்சுகளில் பிரச்சாரம் செய்தது ஒன்றும் புதிதல்ல. பாதிரியார்கள் சொன்னதைக்கேட்டு அவருக்கு ஓட்டுப்போடாமல் போனதும் வியப்புக்குரியது அல்ல. ஏனெனில் 1969–ஆம் ஆண்டு நாகர்கோவில் பாராளுமன்ற தொகுதியில் (கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியின் பழைய பெயர்) போட்டியிட்ட பெருந்தலைவர் காமராஜருக்கு ஓட்டுப்போடக் கூடாது என்று அப்போது சர்ச்சுகளில் பிரச்சாரம் செய்தனர். பாதிரியார்கள் சர்ச்சில் சொன்னதைக்கேட்டு காமராஜருக்கு எதிராக போட்டியிட்ட டாக்டர் மோசசுக்குத்தான் அன்று கிறிஸ்தவர்கள் ஓட்டுப்போட்டனர்.


இது வரலாறு. அன்று மக்களுக்காக உழைத்த காமராஜருக்கு ஓட்டுப்போடக்கூடாது என்றனர் பாதிரியார்கள். இன்று நல்லது செய்த பொன்.இராதாகிருஷ்ணனுக்கு ஓட்டுப்போடக்கூடாது என்று கட்டளையிட்டு தோற்கடித்தனர் பாதிரியார்கள்.


அப்போது, இந்துக்கள் அனைவரும் ஓரணியில் நின்று காமராஜருக்கு ஓட்டுப்போட்டனர். அதனால் கிறிஸ்தவ மதவெறி தோற்கடிக்கப்பட்டது. 1,28,201 ஓட்டுகள் வித்தியாசத்தில் காமராஜர் வெற்றிபெற்றார். ஆனால் இப்போது, நல்லது செய்த பொன்.இராதாகிருஷ்ணன் கிறிஸ்தவ மதவெறிக்கு பலியாகிவிட்டார்.


எவ்வளவு நல்லவனாக இருந்தாலும், எவ்வளவுதான் நல்லது செய்தாலும் கிறிஸ்தவ மதவெறி தோற்கடிக்கும் என்பது மட்டுமல்ல, நல்லது செய்த ஒரு நல்ல மனிதனின் தோல்வியை கொண்டாடவும் செய்யும்.


ஆமாம், கன்னியாகுமரி மாவட்ட வெறிபிடித்த கிறிஸ்தவ பாதிரியார்கள் கூட்டம், பொன்.இராதாகிருஷ்ணனின் தோல்வியைக் கொண்டாடி மகிழ்ந்தது. அவரை தோற்கடித்ததற்காக பாராட்டுவிழாவும் நடத்தியது.


பொன்.இராதாகிருஷ்ணனுக்கு செய்த பாவத்திற்கான தண்டனையை 100 நாட்களுக்குள்ளாகவே அனுபவிக்கின்றனர்.


மாவட்டத்தில் உள்ள 6 எம்எல்ஏக்களும் திமுக – காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்தவர்கள்தான். எம்பி வசந்தகுமாரும் அதே கூட்டணிதான். அவர் புதிது புதிதாக வசந்தன்கோ கிளைகளை திறந்து வருகிறார். மாவட்டம் முழுவதும் சுவர் விளம்பரம் செய்து வருகிறார்.


ஆனால் எந்த வேலையும் குமரிமாவட்டத்தில் நடக்கவில்லை என்று குமுறுகின்றனர் மக்கள். யாரிம் சென்று புலும்புவது என்று தெரியாமல் தவிக்கின்றனர்.


ரோடுகள் சரியில்லை. மீண்டும் குண்டும் குழியுமாகிவிட்டன. கண்டுகொள்ள நாதியும் இல்லை.


மாநில சாலைகளை செப்பனிட மாநில அரசிடம் முறையிட்டு சாதிக்க எம்எல்ஏக்கள் தயாராக இல்லை. ஆனால் அவர்களின் சொந்த தேவைகளை மட்டும் தாராளமாக பெற்று வருகின்றனர்.


எம்பி வசந்தகுமாருக்கு அவரது தொழிலை பார்க்கவே நேரம் போதவில்லை. பிறகு எப்படி மக்கள் பணி ஆற்றுவது?


குமரிமாவட்ட மக்களின் துயரத்தை விளக்கும் வகையில் ரீமிக்ஸ் பாடல் ஒன்றை குமரிமக்கள் வெளியிட்டு உள்ளனர். அந்த பாடல் இப்போது குமரிமாவட்ட சாலைகளின் மோசமான நிலையையும், துயரமான பயணத்தையும் உலகமெங்கும் கொண்டு செல்கிறது.




https://twitter.com/thoppur/status/1173096643614453760




https://twitter.com/asksaravana87/status/1173095521595998208

Next Story
கதிர் தொகுப்பு
Trending News