Kathir News
Begin typing your search above and press return to search.

மங்களம் தரும் மருதமலை

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மருத மலைக்கு இடமில்லை என்றாலும் மருதமலைக்கு என்று தனிச் சிறப்பு ஒன்று உள்ளது.

மங்களம் தரும் மருதமலை

KarthigaBy : Karthiga

  |  10 May 2023 3:00 AM GMT

மருதமலை முருகன் ஆலயத்தை ஏழாவது படை வீடாக வைத்து போற்றுவார்கள். 837 படிகளுடன் அமைந்த மலைக்கோவில் இது. இங்கு வரதராஜ பெருமாளுக்கு தனி சன்னதி இருக்கிறது. பாம்பாட்டி சித்தர் சன்னிதி செல்லும் வழியில் சப்த கன்னியர் சன்னிதி உள்ளது. ஆடிப்பெருக்கின் போது இந்த விசேஷ வழிபாடு நடக்கிறது. பாம்பாட்டி சித்தர் சன்தியில் உள்ள பாறையில் நாக வடிவம் இருக்கிறது .


இந்த நாகத்தின் வடிவிலேயே பாம்பாட்டி சித்தருக்கு முருகன் காட்சி தந்ததாக சொல்லப்படுகிறது . மருதமலையில் முருகனின் அருள் பெற்ற பாம்பாட்டி சித்தர் முருகனுக்கு புதிய சிலை வடித்தார். இந்த சிலை மூலஸ்தானத்தில் இருக்கிறது . தளத்தில் உள்ள விநாயகர் மற்றும் முருகனை வேண்டி மரத்தில் மாங்கல்ய கயிறு மற்றும் தொட்டில் கட்டி வேண்டிக்கொண்டால் திருமணம் மற்றும் புத்திர தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.


வைகாசி விசாகத்தன்று மருதமலை முருகனுக்கு 108 பால்குடம் அபிஷேகம் நடைபெறும் . மருதமலையில் தைப்பூசத்தை ஒட்டி பத்து நாட்கள் பிரம்மோற்சவம் நடக்கிறது. தைப்பூசத்தன்று காலையில் திருக்கல்யாணம் மாலையில் தேர் திருவிழா நடக்கும் . அன்று சுவாமி யானை வாகனத்தில் எழுந்தருள்வார். மருதமலையில் தினமும் மாலையில் தங்கரதத்தில் முருகப்பெருமான் வலம் வருகிறார். மருதமலையில் விநாயகர், முருகன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்கள்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News