ராஜீவ்காந்தி படுகொலையில் கொல்லப்பட்ட காவலரின் பேத்திக்கு இரண்டு ஆண்டுகள் பயிற்சி செலவை ஏற்ற பா.ஜ.க
ராஜீவ் காந்தி கொலையின் போது குண்டுவெடிப்பில் அவருடன் இருந்த காவலர்களில் ஒருவரின் குடும்பத்திற்கு பாரதிய ஜனதா கட்சி உதவி செய்துள்ளது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
By : Mohan Raj
ராஜீவ் காந்தி கொலையின் போது குண்டுவெடிப்பில் அவருடன் இருந்த காவலர்களில் ஒருவரின் குடும்பத்திற்கு பாரதிய ஜனதா கட்சி உதவி செய்துள்ளது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொள்ளும் வேலையில் இலங்கையின் விடுதலைப்புலிகள் அமைப்புகளால் குண்டு வைத்து கொல்லப்பட்டார். அந்த சமயத்தில் அவருடன் காவல் துறையில் பணியாற்றி பாதுகாப்பு நின்றிருந்த எட்டு பேரும் பலியாகினர் அதில் ஒருவரான காவலர் தர்மன் அவரின் குடும்பம் பொருளாதார ரீதியாக சிரமப்பட்டு வந்தது.
குறிப்பாக இறந்த காவலர் தர்மனின் பேத்தி விளையாட்டில் பேட்மிட்டனில் வீராங்கனையாக திகழ்வதும் அவர் இந்தியா முழுவதும் சென்று பயிற்சி எடுக்க தேவையான பொருளாதார உதவிக்கு சிரமப்படுவதும் பா.ஜ.க'விற்கு தெரிய வந்ததும் உடனே பா.ஜ.க'வின் அமிர்பிரசாத் ரெட்டி களத்தில் இறங்கினார்.
பா.ஜ.க'வின் இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டு பிரிவின் தலைவரான அமர் பிரசாத் ரெட்டி அந்த குடும்பத்திற்கு நேரில் சென்று இறந்த தர்மனின் பேத்தி அக்ஷிதாவிற்கு இரண்டு ஆண்டுகளுக்கு தேவையான உதவியை செய்வதாக வாக்குறுதி அளித்ததோடு அவர்களை அண்ணாமலை அவர்களிடம் நேரில் அழைத்துச் சென்று அண்ணாமலை மூலமாகவே அந்த உதவியை வழங்கினார்.
இது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டதுடன் மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இறந்த ராஜீவ் காந்தியை வைத்து அரசியல் செய்து பிழைத்து வரும் கட்சிகளுக்கு மத்தியில் அவருடன் இறந்த காவலரின் குடும்பத்தின் எதிர்காலத்தையும் வாழ்வையும் நினைத்து அவர்களுக்கு அழைத்து உதவி செய்து அந்த செலவை பா.ஜ.க ஏற்றது மக்களிடையே தனி கவனம் பெற்றுள்ளது.