Kathir News
Begin typing your search above and press return to search.

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 10 நாகை மீனவர்களை சென்னையில் வரவேற்ற பா.ஜ.கவினர்

இலங்கை சிறையில் இருந்து 10 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் சென்னைக்கு வந்தனர். அவர்களை பா.ஜ.க.வினர் வரவேற்றனர்.

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 10 நாகை மீனவர்களை சென்னையில் வரவேற்ற பா.ஜ.கவினர்

KarthigaBy : Karthiga

  |  30 Aug 2023 11:15 AM GMT

நாகப்பட்டினம் அக்கரைபேட்டையை சேர்ந்த மீனவர்கள் 10 பேர் கடந்த ஏழாம் தேதி இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது இலங்கை கடற்படை போலீசார் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி பத்து மீனவர்களை கைது செய்தனர் . பின்னர் படகுகளுடன் இலங்கை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் . இதை அடுத்து கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கையால் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.


இந்த நிலையில் நாகையைச் சேர்ந்த 10 மீனவர்களையும் கடந்த- 21 ஆம் தேதி இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. பின்னர் மீனவர்கள் 10 பேரும் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். 10 மீனவர்களும் கொழும்பிலிருந்து விமான மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்திறங்கிய மீனவர்களை பா.ஜ.க சார்பில் மாநில மீனவர் அணி தலைவர் நீலாங்கரை முனுசாமி ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர். தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களை சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றனர்.


SOURCE :DAIL

Next Story
கதிர் தொகுப்பு
Trending News