Kathir News
Begin typing your search above and press return to search.

இலவச ரேஷன் திட்டத்தை மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டித்து அசத்திய மத்திய அரசு!

மத்திய அரசின் இலவச ரேஷன் திட்டம் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இலவச ரேஷன் திட்டத்தை மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டித்து அசத்திய மத்திய அரசு!
X

KarthigaBy : Karthiga

  |  5 Nov 2023 3:15 AM GMT

கொரோனா பெருந் தொற்று காலத்தில் ஏழைகளின் பசியை போக்குவதற்காக பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா என்ற திட்டத்தை கடந்த 2020 ஆம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் நபர் ஒன்றுக்கு ஐந்து கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்பட்டது. உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷனுடன் கூடுதலாக இந்த உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.


இந்த திட்டம் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்த திட்டம் அடுத்த மாதத்துடன் நிறைவடைய இருந்தது.இதை மேலும் நீட்டித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதை பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். சதீஷ்காரின் துர்க் பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசும்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-


80 கோடி ஏழை மக்களுக்கு வழங்கப்படும் இலவச ரேஷன் டிசம்பர் மாதத்துடன் நிறைவடைய இருக்கும் நிலையில் அது மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது. இது வெறும் ஒரு தேர்தல் அறிவிப்பு அல்ல. இது மோடியின் உத்தரவாதம். தங்கள் குடும்பத்துக்காக வீட்டை விட்டு தொலைதூரத்தில் சென்று உழைக்கும் மக்களும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் வழியாக இந்த இலவச ரேஷனை பெற முடியும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். இந்த கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய அவர் ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை வைக்கும் காங்கிரஸ் கட்சியையும் சூதாட்ட செயலி ஊழலில் சிக்கி இருக்கும் சத்தீஷ்கர் முதல் மந்திரியையும் கடுமையாக சாடினார்.


இந்த தொடர்பாக அவர் கூறியதாவது:- ஏழைகள் தான் மிகப்பெரிய ஜாதி. அதனால்தான் அவர்களுக்காக எங்கள் அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏழைகளிடையே பிளவு ஏற்படுத்தும் விளையாட்டு தொடங்கி இருக்கிறது. அத்துடன் ஏழைககளின் ஒற்றுமையை உடைக்கவும் சதி நடந்து வருகிறது. மக்கள் ஒன்றிணைந்து இந்த சதியை முறியடிக்க வேண்டும்.


பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மிகப்பெரிய ஆதரவாளர் நான் ஓ.பி.சி கமிஷனுக்கு எனது அரசு அரசியல் சாசன அந்தஸ்து வழங்கி இருக்கிறது. மருத்துவ கல்லூரிகளில் ஓ.பி.சி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. எனது மந்திரி சபையில் பெரும்பாலான மந்திரிகள் ஓபிசி பிரிவை சேர்ந்தவர்கள் என்றாலும் ஒரு ஓ.பி.சி பிரதமர் காங்கிரஸ் தலைவரால் அவமதிக்கப்படுகிறார். சாதியின் மீது வெறுப்பு இருந்தால் அதற்காக ஒட்டுமொத்த ஓ.பி.சி சமூகமும் ஏன் அவமதிக்கப்படுகிறது? சதீஷ்காரின் சாகு பிரிவினரை ஒரு காங்கிரஸ் தலைவர் திருடன் என அழைக்கிறார்.


கோர்ட் கூட அவரை தண்டித்திருக்கிறது. துபாயிலிருந்து செயல்படும் சூதாட்டக்காரர்களுடன் உள்ள தொடர்பு முதல் மந்திரி தெரிவிக்க வேண்டும். ஊழல்வாதிகளை கணக்கெடுக்க தான் மோடியை மக்கள் டெல்லியில் உட்கார வைத்துள்ளனர்.ஏழைகளை கொள்ளையடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News