Kathir News
Begin typing your search above and press return to search.

கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்திற்கு ரூ.10.75 லட்சம் கோடி திட்டங்களை வழங்கிய மத்திய அரசு- அண்ணாமலை தகவல்!

தமிழகத்திற்கு 9 ஆண்டுகளில் ரூபாய் பத்தே முக்கால் கோடி திட்டங்களை மத்திய அரசு வழங்கி உள்ளதாக அண்ணாமலை தகவல் தெரிவித்துள்ளார்.

கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்திற்கு ரூ.10.75 லட்சம் கோடி திட்டங்களை வழங்கிய மத்திய அரசு- அண்ணாமலை தகவல்!
X

KarthigaBy : Karthiga

  |  26 Dec 2023 10:45 AM GMT

பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து மக்களின் நலனுக்காக செய்து வரும் நலத்திட்டங்கள் எண்ணில் அடங்காதவை. பல மாநிலங்களுக்கும் பல்வேறு வகையில் நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி நல்ல முறையில் நிறைவேற்றி வருகிறது. குறிப்பாக தமிழகத்திற்கு ஒன்பது ஆண்டுகளில் பா.ஜ.க செய்துள்ள திட்டங்கள் லட்சம் கோடி மதிப்பில் ஆனவை. தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-


பிரதமர் மோடி எப்போதும் தமிழக மக்கள் நலனை மனதில் கொண்டுள்ளார். அதற்கு கடந்த 9 ஆண்டுகளில் அவர் எடுத்த நடவடிக்கைகளை சான்று. பெறுமழையால் பாதிக்கப்பட்ட மக்களின் கோபத்தை திசை திருப்பும் வகையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் மத்திய அரசுக்கு எதிராக மிகைப்டுத்தப்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள் . கடந்த 2021 ஆம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட புயல் தாக்கத்தின்போது மாநில அரசு கேட்ட 9,836 கோடியில் மத்திய அரசு ரூபாய் ஆயிரம் கோடி வழங்கியது.


மத்திய அரசு நிதி உதவியுடன் தமிழகம் 11 மருத்துவக் கல்லூரிகளை பெற்றுள்ளது. அதே நேரம் குஜராத் மாநிலத்திற்கு ஐந்து மருத்துவ கல்லூரிகள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டன . பாதிப்பின் போது தமிழக அரசுக்கு மத்திய அரசு ரூபாய் 868 கோடியை மானியமாக வழங்கியது. குஜராத்திற்கு ரூபாய் 34 கோடி மட்டுமே வழங்கியது. இவைகள் சில உதாரணங்கள் மட்டுமே. பிரதமர் மோடி பொறுப்பேற்ற ஒன்பது ஆண்டுகளில் மானியங்கள் மத்திய நிதி உதவி திட்டங்கள் உட்பட பாடத்திட்டங்கள் மூலம் தமிழகம் ரூபாய் 10.76 லட்சம் கோடி பெற்றுள்ளது. இது கடந்த 9 ஆண்டுகளில் தமிழகம் அளித்த வரியை விட இரண்டு மடங்கு அதிகம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


SOURCE :DAILY THANTHI


Next Story
கதிர் தொகுப்பு
Trending News