தலைமை தேர்தல் கமிஷனருக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு- மத்திய அரசு வழங்கியது!
அச்சுறுத்தல் காரணமாக இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமாருக்கு மத்திய அரசு 'இசட்' பிரிவு பாதுகாப்பை வழங்கியுள்ளது .
By : Karthiga
இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஆக இருப்பவர் ராஜீவ்குமார். இவருக்கு 64 வயதாகிறது .1984 ஆம் ஆண்டின் பீகார் மாநிலத்துக்கான ஐஏஎஸ் அதிகாரியான இவர் பணி ஓய்வுக்கு பிறகு கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி தேர்தல் கமிஷனராக நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து 2022-ம் ஆண்டு மே 15ஆம் தேதி தலைமை தேர்தல் கமிஷனராக பதவி உயர்வு பெற்றார். இவர் குஜராத், இமாச்சல பிரதேசம், சத்தீஸ்கர் மத்திய பிரதேசம் ,ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் வெற்றிகரமாக தேர்தலை நடத்தியுள்ளார்.
ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தலையும் நடத்தி முடித்துள்ளார். துல்லியமான திட்டமிடல் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வன்முறையை ஏற்று தேர்தலை நடத்தி முடித்தவர் என்ற பெயரை பெற்றுள்ளார். இதற்கு பணி நிமித்தமாக பல அச்சுறுத்தல்கள் வந்துள்ளன. இது தொடர்பாக உளவுத்துறை அதிகாரிகள் மத்திய அரசுக்கு அறிக்கை அளித்தனர். இதனை பரிசீலித்து மத்திய அரசு அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பை வழங்க உத்தரவிட்டுள்ளது. இதன்படி மத்திய ஆயுதப்படை போலீசாரில் 40 முதல் 45 பேர் அவருக்கு பாதுகாப்பில் எந்நேரமும் ஈடுபட உள்ளனர். வீடு அலுவலகம் மற்றும் அவர் நாட்டில் எங்கு சென்றாலும் பாதுகாப்பு படை வீரர்கள் ஆயுதம் ஏந்தி உடன் செல்வார்கள்.
இதற்கு முன்பு இவருக்கும் மற்ற இரண்டு தேர்தல் கமிஷனர்களுக்கும் ஆயுதம் ஏந்திய டெல்லி போலீசாரின் பாதுகாப்பே அளிக்கப்பட்டு இருந்தது. தற்போது ராஜ்குமாருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன்பு டி.என்.சேஷனுக்கு மட்டுமே இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. அவருக்கு அடுத்து ராஜ்குமாருக்கு அந்த பாதுகாப்பு கிடைத்திருக்கிறது .அவரது பதவி காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
SOURCE :DAILY THANTHI