மக்களுக்கான மத்திய அரசின் திட்டம்-அதிரடியாக குறைய இருக்கும் சிலிண்டர் விலை!
மத்திய அரசு சிலிண்டரின் விலையை அதிரடியாக குறைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
By : Karthiga
மத்திய அரசு மக்களுக்காக பல்வேறு வகையான அதிரடியான நலத்திட்டங்களை அவ்வப்போது செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்று தற்போது சிலிண்டரின் விலையை குறைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் வர்த்தக மற்றும் வீட்டு உபயோக சிலிண்டரின் விலையை கச்சா எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்கின்றனர்.
அதன்படி கடந்த சில மாதங்களாக வீட்டு உபயோக சிலிண்டர் விலை எந்த மாற்றமும் ஏற்படாத நிலையில் வர்த்தக சிலிண்டர் விலை இருமுறை உயர்த்தப்பட்டது. அதன் பின் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு வர்த்தக சிலிண்டர் விலை குறைக்கப்பட்டது. இந்நிலையில் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து இல்லத்தரசிகள் மிகுந்த மகிழ்ச்சிகள் உள்ளார்கள்
அதாவது அடுத்த மாதம் சிலிண்டர் விலை 300 ரூபாய் வரை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வீட்டு உபயோக சிலிண்டர் விலை குறைப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது. நாட்டிற்காகவும் நாட்டு மக்களுக்காகவும் மத்திய அரசு பல்வேறு வகையான நலத்திட்டங்களை செயல்படுத்திக் கொண்டும் அதனை மக்களிடையே சேர்த்துக் கொண்டும் சிறப்பாக செயலாற்றி வருகிறது.
SOURCE :enewz.in