Kathir News
Begin typing your search above and press return to search.

இலங்கை கலவரத்தை பயன்படுத்தி தமிழகத்திற்குள் தேசவிரோதிகள் ஊடுருவல் - உளவுத்துறை எச்சரிக்கை!

இலங்கையில் நடைபெறும் வன்முறையைப் பயன்படுத்தி அவர்களோடு அகதிகளாக தமிழகத்தில் தேசவிரோதிகள் நுழைய வாய்ப்புள்ளதாக மத்திய உள்துறை மூலம் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை கலவரத்தை பயன்படுத்தி தமிழகத்திற்குள் தேசவிரோதிகள் ஊடுருவல் - உளவுத்துறை எச்சரிக்கை!

Mohan RajBy : Mohan Raj

  |  11 May 2022 12:30 PM GMT

இலங்கையில் நடைபெறும் வன்முறையைப் பயன்படுத்தி அகதிகளோடு அகதிகளாக தமிழகத்தில் தேசவிரோதிகள் நுழைய வாய்ப்புள்ளதாக மத்திய உள்துறை மூலம் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் தற்பொழுது மக்கள் கிளர்ச்சி ஏற்பட்டுள்ளது ஆளும் ராஜபக்சே குடும்ப அரசியலுக்கு எதிராக மக்கள் வெகுண்டு எழுந்து உள்ளனர். இதனால் ஆளும் மக்கள் கலவரத்தில் ஆளும்கட்சியினரின் வீட்டை எரிப்பது, அடித்து கொல்வது போன்ற பெரும் வன்முறை சம்பவங்கள் அங்கே நிகழ்ந்து வருகிறது. இதனால் இலங்கையில் இருந்து தமிழகம் வரும் அகதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் இலங்கை வன்முறையைப் பயன்படுத்தி அகதிகளாக தமிழகத்திற்கு தேசவிரோதிகள் ஊடுருவ வாய்ப்பு உள்ளதாக கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பை பலப்படுத்திய உள்துறை மூலம் உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கையை அடுத்து இலங்கை அகதிகள் வருகை கண்காணிக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் குறிப்பாக இலங்கை ஹமாந்தோட்டா சிறையில் இருந்து 50 கைதிகள் தப்பித்து இருப்பதாகவும் இவர்கள் கடல் மார்க்கமாக இந்தியாவில் கூறு நுழைய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த எச்சரிக்கையை முன்னிட்டு சந்தேகப்படும்படியான படகு போன்றவைகள் கடல்பகுதியில் தென்பட்டால் உடனே தகவல் தெரிவிக்கும்படி மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பை பலப்படுத்தவும் கடலோர பாதுகாப்பு குழுமம், கடலோர காவல்படை ஆகியோருக்கு எச்சரிக்கை அனுப்பப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் மீண்டும் தமிழகத்தில் நுழைந்து நிதியை திரட்ட வாய்ப்பிருப்பதாகவும் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தல் கும்பல் வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Source - Asianet News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News