Kathir News
Begin typing your search above and press return to search.

வங்கிகளில் 22,842 கோடி கடன் கடன் வாங்கிவிட்டு மோசடி செய்த கப்பல் கட்டுமான நிறுவனத் தலைவர் கைது

வங்கிகளில் 22,842 கோடி கடன் வாங்கிவிட்டு மோசடி செய்த வழக்கில் பிரபல கப்பல் கட்டுமான நிறுவனத்தின் தலைவர் ரிஷி கமலேஷ் அகர்வால் கைது செய்யப்பட்டார்.

வங்கிகளில் 22,842 கோடி கடன் கடன் வாங்கிவிட்டு மோசடி செய்த கப்பல் கட்டுமான நிறுவனத் தலைவர் கைது
X

KarthigaBy : Karthiga

  |  22 Sep 2022 6:15 AM GMT

வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு செலுத்தாமல் மோசடி செய்த பிரபல தொழிலதிபர்கள் விஜய் மல்லையா ,நீரவ் மோடி, மெகுல் சோக்ஷி போன்றவர்கள் பட்டியலில் சேர்ந்திருப்பவர் குஜராத் மாநிலம் சூரத்தை தலைமை இடமாக கொண்டு செயல்படும் பிரபல கப்பல் கட்டும் தள நிறுவனமான ஏ.பி.ஜி தலைவர் ரிஷி கமலேஷ் அகர்வால் ஆவார். இவர் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி உள்ளிட்ட 28 வங்கிகளில் 22,842 கோடி கடன் வாங்கிவிட்டு வேண்டுமென்றே திருப்பி செலுத்தாமல் மோசடி செய்துள்ளார். பாரதி ஸ்டேட் வங்கியில் மட்டுமே 2468.51 கோடி ஏமாற்றப்பட்டுள்ளது. இதுதான் நாட்டின் மிகப்பெரிய வங்கி மோசடி என கருதப்படுகிறது.


எர்ணஸ்ட் அண்ட் யெங் என்ற நிறுவனம் நடத்திய தடவியல் ஆய்வில் 2012 முதல் 2017 காலகட்டத்தில் ரிஷி கமலேஷ் அகர்வாலும் அவரது கூட்டாளிகளும் குற்றச்சதி, மோசடி, நம்பிக்கை மோசடி,அரசு பதவிகளை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட குற்றங்களை அரங்கேற்றி இருப்பது அம்பலத்துக்கு வந்தது. இது தொடர்பான புகாரின் பேரில் ரிஷிகா கமலேஷ் அகர்வால் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. வங்கி கடனை ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக பெற்றுக்கொண்டு அதற்கு செலவிடாமல் பிற வழிகளில் செலவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.


இவரது வங்கி கடன் 2016 ஜூலை மற்றும் 2019 இடையே வராக்கடனாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ரிஷி கமலேஷ் அகர்வால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கையை சி.பி.ஐ மேற்கொண்டுள்ளது.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News