மீட்கப்பட்ட சுரங்கப்பாதை தொழிலாளர்களுக்கு தலா ஒரு லட்சம் - உத்தரகாண்ட் முதல் மந்திரி!
மீட்கப்பட்ட தொழிலாளர்களை ஆஸ்பத்திரியில் சந்தித்த உத்தரகாண்ட் முதல் மந்திரி தலா ஒரு லட்சம் வழங்கினார்.
By : Karthiga
உத்தரகாண்டில் சில்க்யாரா சுரங்க பாதையில் சிக்கிய தொழிலாளர்கள் 41 பேரும் நேற்று முன்தினம் இரவு பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.அருகே சினியாலிசார் நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் ஒவ்வொருவரையும் உத்தரகாண்ட முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவர்களுக்கு தலா ஒரு லட்சத்துக்கான காசோலையை அவர் வழங்கினார். ஆஸ்பத்திரிக்கு வெளியே காத்திருந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருடனும் அவர் பேசினார்.
குழாய் வழியாக சுரங்க பாதைக்குள் சென்று தொழிலாளர்களை மீட்டு வந்த மீட்பு படையினர் ஒவ்வொருவருக்கும் தலா ரூபாய் 50,000 பரிசுத்தொகையையும் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார். முன்னதாக செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர் மீட்கப்பட்ட தொழிலாளர்கள் எனது குடும்பத்தினரைப் போல அவர்கள் நமக்காகவும் நமது நாட்டுக்காகவும் தானே உழைக்கிறார்கள். தொழிலாளர்கள் மீட்கப்பட்டதில் அவர்களது குடும்பத்தினருக்கு சமமாக நான் மகிழ்ச்சி அடைகிறேன். எனது தீபாவளி ,தேவ தீபாவளி பண்டிகை எல்லாம் தொழிலாளர்கள் மீட்கப்பட்ட நேற்றைய தினம் தான்.
நான் எனது முதல் மந்திரி பதவி காலத்தில் பல சவால்களை சந்தித்துள்ளேன். ஆனால் சுரங்கப்பாதை விபத்து சம்பவம் தான் மிகவும் கடினமானது.உத்தர் காசியில் அருள்பாலிக்கும் பாபா பாக் நாக் மீட்பு பணியில் ஈடுபட்ட பல்வேறு அரசு துறைகள், தேசிய சர்வதேச நிபுணர்களுடன் தொடர் ஆதரவு மற்றும் வழிகாட்டுதலுக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன். சில்க்யாரா சுரங்கப்பாதை விபத்தை தொடர்ந்து உத்தரகாண்டில் நடைபெறும் அனைத்து சுரங்கப்பாதை பணிகளையும் ஆய்வு செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
SOURCE :DAILY THANTHI