Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க அரசை எதிர்த்து கேள்வி கேட்க துவங்கிய சி.ஐ.டி.யூ ஊழியர் சங்கம்

தூய்மை பணியாளர்களுக்கு அரசு அறிவித்துள்ள அகவிலைப்படியை விரைவில் வழங்க வேண்டும் என்று ஊரக வளர்ச்சி துறை சி.ஐ.டி.யூ ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தி.மு.க அரசை எதிர்த்து கேள்வி கேட்க துவங்கிய சி.ஐ.டி.யூ ஊழியர் சங்கம்

KarthigaBy : Karthiga

  |  28 Sep 2022 4:45 AM GMT

தூய்மை பணியாளர்களுக்கு அரசு அறிவித்துள்ள அகவிலைப்படியை விரைவில் வழங்க வேண்டும் என்று ஊரக வளர்ச்சித் துறை சி. ஐ. டி. யூ ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. நீடாமங்கலத்தில் திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை சி.ஐ.டி.யூ ஊழியர் சங்க பேரவை கூட்டம் மாவட்ட தலைவர் கே. கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது.திருத்துறைப்பூண்டி ஒன்றிய தலைவர் எம்.முரளி வரவேற்றார். நீடாமங்கலம் ஒன்றிய தலைவர் எம்.பெரியசாமி கொடியேற்றினார். மாவட்ட செயலாளர் கே.முனியாண்டி அறிக்கை தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-


ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை ஊதியத்தையும் நிலுவை தொகையையும் வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு அரசு அறிவித்துள்ள 34 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக 21,000 வழங்க வேண்டும். அரசு அறிவித்த கொரோனா உதவித்தொகை 15 ஆயிரத்தை விரைவில் வழங்க வேண்டும்.தூய்மை காவலர்களை பணி நிரந்தரம் செய்து 10,000 ஊதியம் வழங்க வேண்டும் ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர்களுக்கு அரசு அறிவித்துள்ள பணப்பயன் 50000 மற்றும் மாத ஊதியம் 2000 வழங்க வேண்டும் பணி பதிவேட்டை பராமரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News