பாகிஸ்தானில் முஸ்லிம்கள் அட்டூழியம்: பாட்டு கேட்ட கிறிஸ்தவ வாலிபர் படுகொலை!
கிறிஸ்தவர்கள் 2வது பெரிய மைனாரிட்டியாக உள்ளனர்.
By : Thangavelu
பாகிஸ்தானில் முஸ்லிம்கள் தவிர மற்ற மதத்தினர் சிறுபான்மையினராக உள்ளனர். கடந்த 2017ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுக்ப்பின்படி இந்துக்கள் மிகப் பெரிய மைனாரிட்டியாக இருக்கின்றனர். இதனையடுத்து கிறிஸ்தவர்கள் 2வது பெரிய மைனாரிட்டியாக உள்ளனர். தற்போது பாகிஸ்தானில் மைனாரிட்டி சமூகத்தினர் மீது முஸ்லிம்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பஞ்சாப் மாகாணம், லாகூர் நகரில் வால்டன் என்ற இடத்தில் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு கிறிஸ்தவ வாலிபர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அப்பகுதியில் பர்வேஸ் மசீ 25 என்ற வாலிபர் வீட்டில் பாட்டு கேட்டுள்ளார். அப்போது தனக்கு சத்தம் அதிகமாக கேட்கிறது என்று சோனி மாலிக் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதன் பின்னர் மாலிக் தனது ஆட்களுடன் பர்வேசின் உறவினரான சோபல் மசீ என்பவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் வசித்து வரும் கிறிஸ்தவர்கள் கடுமையான அச்சத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் தொடர்ந்து சிறுபான்மை மக்களின் உயிர்கள் பறிபோய் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Daily Thanthi
Image Courtesy: La Stampa