Kathir News
Begin typing your search above and press return to search.

3962 கோடி டாலரை எட்டிய நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி - வர்த்தக அமைச்சகம் தகவல்!

நாட்டின் ஏற்றுமதி 3962 கோடி டாலர் என்று வர்த்தக அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

3962 கோடி டாலரை எட்டிய நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி - வர்த்தக அமைச்சகம் தகவல்!

KarthigaBy : Karthiga

  |  20 Feb 2024 11:09 AM GMT

காஸா போரினால் செங்கடல் பகுதியில் வர்த்தக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் இந்த ஜனவரி மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி மூன்று மாதங்கள் காணாத வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து வர்த்தகத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கைகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :-


கடந்த ஜனவரி மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 3,692 கோடி டாலராக உள்ளது. இது முந்தைய நிதி ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் 3.12% அதிகமாகும் .இது கடந்த மூன்று மாதங்கள் காணாத அதிகபட்ச வளர்ச்சியாகும் .அதே நேரம் கடந்த ஜனவரியில் வர்த்தக பற்றாக்குறை ஒன்பது மாதங்களில் இல்லாத அளவுக்கு 1,749 கோடி டாலராக குறைந்தது. நாட்டின் இறக்குமதி தொடர்ச்சியாக இரண்டு மாதங்களாக எதிர்மறை வளர்ச்சியை பதிவு செய்த பின்னர் கடந்த ஜனவரியில் அது சுமார் மூன்று சதவீதம் அதிகரித்து 5,441 கோடி டாலராக உள்ளது .


இதற்கு முன்னர் வர்த்தக பற்றாக்குறை 2023 ஏப்ரலில் 1,524 கோடி டாலராக பதிவு செய்யப்பட்டது .2023 ஜனவரியில் அது 1,703 கோடி டாலராக இருந்தது .கடந்த ஜனவரி மாதத்தில் நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி 4.33 சதவீதம் அதிகரித்து சுமார் 1,256 கோடி டாலராக உள்ளது. அந்த மாதத்தில் தங்கம் இறக்குமதி சுமார் 174 சதவீதம் அதிகரித்து 190 கோடி டாலராக உள்ளது. ஒட்டுமொத்தமாக நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் ஜனவரி மாதங்களில் ஏற்றுமதி 4.89& குறைந்து 35, 392 கோடி டாலராக உள்ளது .


அந்த காலகட்டத்தில் ஒட்டுமொத்த இறக்குமதி 6.71% குறைந்து 56,112 கோடி டாலராக உள்ளது. இதனால் 2022-23 ஏப்ரல் - ஜனவரியில் 22,937 கோடி டாலராக இருந்த வர்த்தக பற்றாக்குறை நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் சுமார் 20,720 கோடி டாலராக குறைந்துள்ளது. 2023 - 24 ஆம் நிதி ஆண்டில் ஏப்ரல் ஜனவரி காலகட்டத்தில் நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி சுமார் 15.91 சதவீதம் சரிந்து 14, 675 கோடி டாலராக உள்ளது. தங்கம் இறக்குமதியும் 301.7 சதம் அதிகரித்த சுமார் 3,800 கோடி டாலராக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


SOURCE :Kaalaimani.com

Next Story
கதிர் தொகுப்பு
Trending News