Kathir News
Begin typing your search above and press return to search.

5.1% வளர்ச்சியை எட்டிய நாட்டின் கனிம உற்பத்தி!

நாட்டின் கனிம உற்பத்தி கடந்த டிசம்பர் மாதத்தில் 5.1% வளர்ச்சியை எட்டியுள்ளது.

5.1% வளர்ச்சியை எட்டிய நாட்டின் கனிம உற்பத்தி!
X

KarthigaBy : Karthiga

  |  23 Feb 2024 2:02 PM GMT

நாட்டின் கனிம உற்பத்தி கடந்த டிசம்பர் மாதத்தில் 5.1% வளர்ச்சி கண்டதாக மத்திய சுரங்கங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இது குறித்து மத்திய சுரங்கங்கள் அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பாவது:-


2023 டிசம்பர் மாதத்திற்கான சுரங்கம் மற்றும் குவாரி துறையில் கனிம உற்பத்தி குறியீடு 139.4 ஆக உள்ளது. இது 2022 டிசம்பர் மாத நிலையுடன் ஒப்பிடும்போது 5.1 சதவீதம் அதிகமாகும். இந்திய சுரங்கத்துறையின் தற்காலிக புள்ளி விவரங்கள் படி ஏப்ரல் டிசம்பர் - 2021 காலகட்டத்திற்கான ஒட்டுமொத்த வளர்ச்சி முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தை விட 8.5% ஆகும்.


2023 டிசம்பரில் முக்கியமான கனிமங்களின் உற்பத்தி அளவு நிலக்கரி 929 லட்சம் டன், பழுப்பு நிலக்கரி 40 லட்சம் டன் ,பெட்ரோலியம் 25 லட்சம் டன், இரும்புத்தாது 255 லட்சம் டன், சுண்ணாம்புகல் 372 லட்சம் டன், பயன்படுத்தப்பட்ட இயற்கை எரிவாயு 3078 மில்லியன் கன மீட்டர் .பாக்சைட் 2429 ஆயிரம் டன், குரோமைட் 235,000 டன் தாமிரஅடர் பதினோராயிரம் டன், ஈய அடர் 35,000 டன் ,மாங்கனிசு தாது 319 ஆயிரம் டன், துத்தநாக அடர் 148 ஆயிரம் டன் ,பாஸ்போரைட் 117000 டன், மேக்னசைடு 16 ஆயிரம் டன்,தங்கம் 122 கிலோ ஆகும்.


SOURCE :Kaalaimani.com

Next Story
கதிர் தொகுப்பு
Trending News