Kathir News
Begin typing your search above and press return to search.

“விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட்ட நாள்தான், என் வாழ்க்கையின் முக்கியமான நாள்”-முத்தையா முரளிதரன்! இவரது பாத்திரத்தில்தான் விஜய்சேதுபதி நடிக்கிறார்!!

“விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட்ட நாள்தான், என் வாழ்க்கையின் முக்கியமான நாள்”-முத்தையா முரளிதரன்! இவரது பாத்திரத்தில்தான் விஜய்சேதுபதி நடிக்கிறார்!!

“விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட்ட நாள்தான், என் வாழ்க்கையின் முக்கியமான நாள்”-முத்தையா முரளிதரன்! இவரது பாத்திரத்தில்தான் விஜய்சேதுபதி நடிக்கிறார்!!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 Sep 2019 7:53 AM GMT



“விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே எனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள்” என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் மீண்டும் தெரிவித்துள்ளார்.


இலங்கையில் நடந்த இறுதிகட்ட போரில் ஈழத்தமிழர்கள் 1.75 லட்சம் பேரை கொன்று குவித்த கோத்தபய ராஜபக்சே இலங்கையில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்காக இலங்கை தலைநகர் கொழும்புவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் கலந்துகெண்டார்.


அதில் அவர் பேசியதாவது:-


இலங்கை அரசோடு நடந்த சமாதான பேச்சுவார்த்தைகளில் விடுதலைப் புலிகளுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர்கள் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தாமல் அப்பாவிகளை கொன்றுவிட்டனர்.


2009-இல், விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு யுத்தம் முடிவுக்கு வந்த நாளே எனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள்.


இலங்கையை பொறுத்தவரை, அனுபவம் வாய்ந்த ஒரு அரசியல்வாதிதான் ஆட்சி செய்ய வேண்டும். அவரே அடுத்த அதிபராகவும் வரவேண்டும். மக்களின் பிரச்சனைகளுக்கு அனுபவம் உள்ள ஒருவரால்தான் தீர்வு காண முடியும்.


அதிபர் தேர்தலில் யாருக்கு ஓட்டு? மக்களுக்கு பாதுகாப்பு வழங்க தகுதியான ஒரு தலைவருக்குத்தான் (ராஜபக்சே) அதிபர் தேர்தலில் நானும் வாக்களிப்பேன்.


இவ்வாறு முத்தையா முரளிதரன் பேசினார்.




https://www.kalmunainet.com/புலிகள்-ஒழிக்கப்பட்ட-நாள/


இலங்கையில் உள்ள தமிழர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் வில்லனாக உருமாறிப்போன, தமிழர்களின் வில்லன் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் தடித்தே தீருவேன் என்று அடம்பித்து வருகிறார் கதாநாயகன் விஜய்சேதுபதி.


தமிழர் என்று சொல்வதில் அவமானமாக இன்றுவரை நினைப்பவர் முத்தையா முரளிதரன். சில ஆண்டுகளுக்கு முன்னால், கொழும்பு கொச்சிக்கடையில் தன்னை சந்தித்த தமிழ் இளைஞர்களிடம், “எனக்கு தமிழ் தெரியாது” என்றுகூறி சிங்களத்தில் பேசினார்.


தமிழ் இனப்படுகொலையை அரங்கேற்றிய சிங்கள இனவெறியன் ராஜபக்சேவுக்கு இன்றுவரை வெண்சாமரம் வீசிவரும் ஒட்டுமொத்த தமிழினத் துரோகி முத்தையா முரளிதரன்.


இப்படிப்பட்ட தமிழின துரோகியான முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில்தான் நடிகர் விஜய்சேதுபதி நடிக்கிறார்.


இந்த செய்தியை கேள்வி பட்டவுடன் தமிழக தமிழர்கள், இலங்கை தமிழர்கள் உள்பட உலகம் எங்கும் வாழும் ஒட்டுமொத்த தமிழர்களும் கொதித்து எழுந்தனர். தங்களின் கடுமையான கண்டனங்களை வெளிப்படுத்தினர்.


ஆனால், தமிழர்களின் பணத்தில் கொழுத்து வளர்ந்த நடிகர் விஜய் சேதுபதி, ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் குரலை காலில் போட்டு மிதித்துவிட்டு, முத்தையா முரளிதரனாக நடித்தே தீருவேன் என்று ஆணவமாக அறிவித்து உள்ளார்.


தமிழின துரோகி முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடித்து, அதை தமிழர்களை பார்க்க வைத்து, அதன் மூலம் தமிழர்கள் பணத்தில் மேலும் கொழுத்து செழிக்க முடிவு செய்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. இவரது இந்த ஈன செயல், இலங்கை தமிழர்களுக்கு மட்டுமல்ல உலக தமிழ் இனத்துக்கே இதுவரை யாரும் செய்ய முற்படாத பெரும் துரோகம் ஆகும்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News