காட்டி கொடுத்த தி.மு.க! மாட்டி கொண்ட கம்யூனிஸ்டுகள்! கூட்டணி முறிவு?
காட்டி கொடுத்த தி.மு.க! மாட்டி கொண்ட கம்யூனிஸ்டுகள்! கூட்டணி முறிவு?
By : Kathir Webdesk
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கம்யூனிஸ்டுகள் பணம் வாங்கி கொண்டு கூட்டணி வைத்தது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கூட்டணியின் போது தேர்தல் செலவிற்காக பணம் பெற்றதை தி.மு.க. போட்டு கொடுத்ததால், கம்யூனிஸ்ட்கட்சிகள் பீதி அடைந்துள்ளனர். இதனால் இரு கட்சிகளுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இது கூட்டணியில் பிளவு ஏற்படும் என்கிறது கம்யூனிஸ்டுகளின் டெல்லி வட்டாரங்கள்.
நாடளுமன்ற தேர்தல் நடந்து முடிந்த பின்னர் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து கட்சிகளும், தேர்தலின் போது செலவு செய்த செலவுகளை, தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கவேண்டும் அவ்வாறு கணக்குகளை , தி.மு.க சமர்ப்பித்தது, சமர்ப்பிக்கப்பட்ட கணக்கின் அடிப்படையில் , திராவிட முன்னேற்ற கழகத்திடம், தனது இருப்பாக 148.50 கோடி ரூபாய் கணக்கு காட்டியுள்ளது. இதில் நன்கொடை மட்டும் 50.30 லட்சம் ரூபாய் என சொல்லியுள்ளது .தேர்தல் செலவிற்காக இருப்பு தொகையான 140 கோடியில் 79.26 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது என தேர்தல்ஆணையித்திடம் கூறியுள்ளது தி.மு.க
இந்த 79 கோடியில் தனது கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, கொ.ம.தே.க ஆகிய கட்சிகளுக்கு சுமார் 15 கோடி ரூபாயும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, 10 கோடி ரூபாயும், நன்கொடையாக வழங்கியதாக திமுக கணக்கு காட்டியுள்ளது.
சிறிய கட்சிகளை தங்கள் கூட்டணிக்குள் இழுப்பதற்கு பெரிய கட்சிகள் பேரம் பேசி தங்கள் கூட்டணியில் இழுத்து கொள்ளும். எந்த சிறிய கட்சியும் பெயரளவில் தான் கொள்கையை பின்பற்றும் பண அளவில்தான் தன் நடை இருக்கும். என்பது திமுக வின் தேர்தல் கணக்கு கூறி விட்டது.
தி.மு.க தவறை மறைப்பதற்காக கூட்டணி கட்சிகளுக்கு பணம் கொடுத்ததை போட்டு கொடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணி கட்சிகளுக்கு. இது மட்டுமில்லாமல் அமலாக்க துறை யின் கண்கள் திமுகவை நோக்கியுள்ளது
கம்யூனிஸ்ட்கள் கட்சிகளின் தொண்டர்கள் இந்த விஷயத்தை கேள்வி பட்டு தங்கள் கட்சியினர் மீது அதிருப்தி அடைந்துள்ளனர். ஏனென்றால் கட்சி செலவிற்கு நாங்கள் கடை கடையாக உண்டியல் ஏந்தி வசூல் செய்து போஸ்டர் பேனர் என வைத்து வருகிறோம், கட்சி மேலிடமோ கோடி கோடியாக வாங்கி கொண்டு செலவு செய்யாமல் அமுக்கி விடுகின்றனர் என்கின்றார் ஒரு கட்சி நிர்வாகி.
தமிழக கம்யூனிஸ்ட்கள் மேலிடம் தரப்பில் வாங்கிய பணத்தை , திமுக மாவட்ட நிர்வாகிகளிடம் வழங்கி திமுகவின் தேர்தல் செலவுக்கு வழங்கி விட்டோம் என அந்தர் பலடி அடித்துள்ளார். திமுகவோ எங்களுக்கு தேர்தல் நன்கொடை, அளித்தது போல் தேர்தல் ஆணையத்திடம் சொல்லியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல் எங்கள் கட்சியின் மீது வைத்துள்ள மக்கள் நம்பிக்கையை கெடுத்துவிடுவது போல் அமைந்துள்ளது இந்த விஷயத்தை நாங்கள் வெற்றி பெட்ரா இடங்களில் மக்களிடம், சொல்ல வேண்டிய கட்டாயம் , ஏற்பட்டுள்ளது. கூட்டணி தர்மத்திற்கு எதிராக திமுக செயல்பட்டுள்ளது. இது கூட்டணியில் பெரும் குழப்பத்தை உண்டாக்கியுள்ளது . கூட்டணி தொடர்வது குறித்து. எங்களின் தேசிய தலைமை, தான் முடிவெடுக்க வேண்டும் என கம்யூனிஸ்ட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.