Kathir News
Begin typing your search above and press return to search.

வடிவேல் பாணியில் வீர வசனம் பேசி கடைசி வரைக்கும் மூலபத்திரத்தை காட்டாத தி.மு.க.!

வடிவேல் பாணியில் வீர வசனம் பேசி கடைசி வரைக்கும் மூலபத்திரத்தை காட்டாத தி.மு.க.!

வடிவேல் பாணியில் வீர வசனம் பேசி கடைசி வரைக்கும் மூலபத்திரத்தை காட்டாத தி.மு.க.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 Nov 2019 10:58 AM IST


கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலம் என சா்ச்சை எழுந்தது.


இந்த நிலையில் பாஜக மாநிலச் செயலாளா் ஸ்ரீனிவாசன் அளித்த புகாரின் அடிப்படையில், முரசொலி அறக்கட்டளை நிா்வாக இயக்குநரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலினுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையத்தின் சாா்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.


இது தொடர்பாக தேசிய ஆணையத்தின் துணைத் தலைவர் டாக்டர் எல் முருகன் விசாரணைக்கு வந்தது . இந்த விசாரணையின் போது, இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை அறிக்கை, கோப்புகள், வழக்கு குறிப்புகள் உட்பட உரிய ஆவணங்களை கொண்டு வருமாறு கூறப்பட்டிருந்தது.முரசொலி அலுவலகத்தின் நிர்வாக இயக்குநர் உதயநிதி என்பதால் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அதன்படி நேற்று தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி, முரசொலி அறக்கட்டளை அறங்காவலர் என்ற முறையில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அது போல் தமிழக தலைமை செயலாளர் சண்முகமும் ஆஜராகினார்கள்.


அப்போது ஆஜரான திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வீர வசனங்களை பேசி கொண்டே இருந்தார் பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இருக்கும் வீடுகள், பாஜகவின் அலுவலகமான கமலாலயம் ஆகியவை பஞ்சமி நிலத்தில் இருப்பதாக யாராவது புகார் அளித்தால் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரிக்க முன்வருமா?" அடுத்து ராமதாஸ் வைத்திருக்கும் 1000 ஏக்கர் நிலத்தை பற்றி பேசினார்.பல வசனங்களை பேசி கொண்டே இருந்தாரே தவிர கடைசி வரைக்கும் மூலபத்திரத்தை பற்றியும் அதன் ஆவணங்களை சமர்பிக்காமல் வெளியே வந்தும் வீர வசனங்களை முழங்கியுள்ளார்.


இது வடிவேல் ஒரு படத்தில் சுந்தர் சியிடம் சிக்கி கொண்டு தப்பித்து கொள்வதற்காக வீர வசனங்களை பேசி அங்கு வா இங்கு வா அலைக்கழித்து வருவார். அதுபோல் தற்போது திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி ஆதாரங்களை காட்டமால் வீரவசனம் பேசி தப்பித்துள்ளார் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்


Next Story
கதிர் தொகுப்பு
Trending News