Kathir News
Begin typing your search above and press return to search.

உக்ரைனில் இருந்து போலந்திற்குள் செல்ல 10 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக அந்நாட்டின் வான்வெளி மூடப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள இந்தியர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் அண்டை நாடுகளுக்கு அழைத்து செல்லப்பட்டு இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

உக்ரைனில் இருந்து போலந்திற்குள் செல்ல 10 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

ThangaveluBy : Thangavelu

  |  28 Feb 2022 6:49 AM GMT

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக அந்நாட்டின் வான்வெளி மூடப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள இந்தியர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் அண்டை நாடுகளுக்கு அழைத்து செல்லப்பட்டு இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

தற்போது உக்ரைனில் 16 ஆயிரம் இந்தியர்கள் இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. தற்போது உக்ரைன் மீது ரஷ்ய படைகள் ஆக்ரோஷமான முறையில் நடத்தி வரும் தாக்குதலால் பலர் சுரங்கப்பாதைகளில் தஞ்சமடைந்துள்ளனர். இதனால் உக்ரைன் வாழ் இந்தியர்கள் ருமேனியா மற்றும் ஹங்கேரி எல்லைகளுக்கு அழைத்து செல்லபட்டு அங்கிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து வரப்படுகின்றனர். பேருந்துகள் மூலமாக பத்திரமாக இந்தியர்கள் அண்டை நாடுகளுக்கு நகர்த்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், உக்ரைனில் உள்ள மற்ற இந்தியர்கள் எல்லை வழியாக போலந்திற்குள் செல்வதற்கு இன்று (பிப்ரவரி 28) முதல் ஷெஹினியில் இருந்து 10 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் கூறியுள்ளது. மற்ற இந்தியர்கள் வெளியேறுவதற்கும் 24 மணி நேரம் இயங்கும் கட்டுப்பாட்டு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Source, Image Courtesy: Maalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News