சிபிராஜ் நடித்து கொண்டிருக்கும் “வால்டர்” திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு!!
சிபிராஜ் நடித்து கொண்டிருக்கும் “வால்டர்” திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு!!
By : Kathir Webdesk
சிபிராஜ் நடிக்கும் “வால்டர்” திரைப்படம் இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடந்து உள்ளது . இப்படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக ஷிரின் காஞ்வாலா நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சமுத்திரக்கனி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். தற்போது இவர்கள் இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் சென்னையில் நடிக்க உள்ளனர்.
இப்படத்தை டாக்டர் பிரபு திலக் 11:11 நிறுவனத்தின் சார்பாக தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் சென்னையில் ஆரம்பித்து முழுவதையும் அங்கேயே முடிக்க உள்ளனர்.
“வால்டர்” விறுவிறுப்பான திரில்லர் படம். இப்படத்தில் சிபிராஜ் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். “. சிபிராஜின் தந்தை சத்யராஜ் நடித்த “வால்டர் வெற்றிவேல்” படம் மாபெரும் வெற்றியடைந்தது. அப்படத்தின் தலைப்பு அதிர்ஷ்டம் தான் இந்த “வால்டர்” படம் . “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்த ஷிரின் இப்படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.