'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை ஆய்வு செய்யும் உயர்மட்ட குழுவின் முதல் கூட்டம்!
'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை ஆய்வு செய்யும் உயர்மட்ட குழு வருகிற 23ஆம் தேதி நடக்க இருக்கிறது.

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எனவே இதற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்து வருகிறது. இதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த தலைமையில் எட்டாம் தேதி உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது . இதில் உள்துறை மந்திரி மாநிலங்களவை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் .'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை செயல்படுத்துவதற்காக மேற்கொள்ள வேண்டிய அரசியல் சாசனம், திருத்தங்கள் தேவைப்படும் வசதிகள், செலவினம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைகளை வழங்க இந்த குழுவினரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த குழுவின் முதலாவது ஆலோசனை கூட்டம் வருகிற 23ஆம் தேதி நடைபெறும் என குழுவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் தெரிவித்துள்ளார். ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள தனியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு வந்த அவரிடம் இந்த குழுவின் முதல் கூட்டம் எப்போது என்ன செய்தியாளர்களிடம் கேட்டனர். அதற்கு பதில் அளிக்கும் போது இந்த தகவலை வெளியிட்டார். எனினும் இந்த கூட்டத்தில் எத்தகைய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடைபெறும் என்பது குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.
SOURCE :DAILY THANTHI