Kathir News
Begin typing your search above and press return to search.

உயர... உயரப் பறந்து விட்டு இன்று டமால் ..என்று கீழே விழுந்த தங்கம் விலை!! வாங்குவோர் முகத்தில் ஜொலிப்பு!!

உயர... உயரப் பறந்து விட்டு இன்று டமால் ..என்று கீழே விழுந்த தங்கம் விலை!! வாங்குவோர் முகத்தில் ஜொலிப்பு!!

உயர... உயரப் பறந்து விட்டு இன்று டமால் ..என்று கீழே விழுந்த தங்கம் விலை!! வாங்குவோர் முகத்தில் ஜொலிப்பு!!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 Aug 2019 1:00 PM GMT


தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில், சென்னையில் இன்று தங்கம் சவரனுக்கு ரூ.408 குறைந்து ரூ.28,608க்கு விற்பனை ஆகிறது.


தங்கம் விலை கடந்த 2 மாதங்களுக்கு மேலாக உச்சத்தில் காணப்படுகிறது. இடைவெளி எதுவும் இல்லாமல் ஒவ்வொரு நாளும் விலை ஏறுமுகத்திலேயே இருக்கிறது. அதிலும், இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து விலை அதிகளவில் அதிகரித்துள்ளது.


கடந்த 2-ந்தேதி ஒரு பவுன் ரூ.27 ஆயிரத்தை கடந்த நிலையில், அதன்பின்னரும் தொடர்ந்து விலை உயர்ந்ததால், கடந்த 7-ந்தேதி ஒரு பவுன் ரூ.28 ஆயிரத்தை தொட்டது. இந்தநிலையில் நேற்றும் விலை அதிகரித்து தான் காணப்பட்டது.


நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 582-க்கும், ஒரு பவுன் ரூ.28 ஆயிரத்து 656-க்கும் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.21-ம் பவுனுக்கு ரூ.168-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 603-க்கும், ஒரு பவுன் ரூ.28 ஆயிரத்து 824-க்கும் விற்பனை ஆனது.
நேற்று முன்தினம் மாலையில் தங்கம் கிராமுக்கு 30 காசும், கிலோவுக்கு ரூ.300-ம் அதிகரித்து, ஒரு கிராம் 47 ரூபாய் 60 காசுக்கும், ஒரு கிலோ ரூ.47 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
நேற்று சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ரூ.3,612க்கு விற்கப்படுகிறது. மேலும் 22 காரட் தங்கம் சவரனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.28,896 க்கு விற்கப்படுகிறது. 13 நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,416 உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது.
இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.51 குறைந்து ரூ.3,756க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.408 குறைந்து ரூ.28,608க்கு விற்பனை ஆகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News