மத்திய அரசு மக்களுக்கு வழங்கிய மகிழ்ச்சி செய்தி-டீசல் வாகனங்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் திட்டம் இல்லை!
டீசல் வாகனங்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் திட்டம் இல்லை என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கடந்த 12- ம் தேதி நடைபெற்ற மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் ஆண்டு கூட்டத்தில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்காரி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் டீசல் இன்ஜின் வாகனங்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஜி. எஸ்.டி வரி விதிக்க மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு கோரிக்கை விடுத்துள்ளேன் என கூறினார். இது சர்ச்சையை கிளப்பியது. இதை அடுத்து டீசல் வாகனங்களுக்கு கூடுதல் வரிவிதிக்கும் திட்டம் அரசிடம் இல்லை என நிதின் கட்காரி விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில் டெல்லியில் நேற்று தனியார் செய்தி சேனலுக்கு பேட்டியளித்த நிதின் கட்காரி இந்த விவகாரம் குறித்து மீண்டும் விளக்கம் அளித்தார். இது பற்றி அவர் கூறுகையில் நான் டீசல் எரிபொருளுக்கு எதிரானவன் அல்ல. டீசல் வாகனங்களுக்கு நாங்கள் எந்த வரியும் விதிக்கப் போவதில்லை. மாசுபாட்டின் பார்வையில் டீசல் மிகவும் ஆபத்தானது. அது உண்மையில் நாட்டில் சுகாதார பிரச்சனையை ஏற்படுத்துகிறது. எனவே மாசுபாட்டை குறைக்க மாற்று எரிபொருளில் கவனம் செலுத்துவதே சிறந்த வழி என்பதை அறிவுறுத்திக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
SOURCE :DAILY THANTHI