Kathir News
Begin typing your search above and press return to search.

உலக நாடுகளின் முன்னிலையில் பன்மடங்கு அதிகரித்த இந்தியாவின் மீதான நன்மதிப்பு!

பிரதமர் மோடி மக்களவையில் ஆற்றிய உரையில் இந்தியாவின் மீதான மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளின் முன்னிலையில் பன்மடங்கு அதிகரித்த இந்தியாவின் மீதான நன்மதிப்பு!

KarthigaBy : Karthiga

  |  12 Feb 2024 3:32 AM GMT

இந்தியாவின் மீதான உலக நாடுகளின் நன்மதிப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ராமர் கோவில் திறப்பு தொடர்பான தீர்மானத்தின் மீது மக்களவையில் பிரதமர் மோடி ஆற்றிய உரையில், "கொரோனா காலத்திலும் நம் நாட்டின் வளர்ச்சி தடைபடவில்லை .உலகையே அச்சுறுத்திய கொரோனா பெருந்தொற்றை நாம் வெற்றிகரமாக எதிர்கொண்டு மீண்டு வந்துள்ளோம். மக்களவையில் தங்களது பங்களிப்பை செலுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி.


கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு முக்கிய முடிவுகளை அரசு எடுத்துள்ளது. சீர்திருத்தம் செயல்பாடு மற்றும் மாற்றம் கொண்டதாக கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடு இருந்துள்ளது. நடப்பு ஐந்து ஆண்டு ஆட்சி காலத்தில் நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டிடம் கிடைத்துள்ளது. நடப்பு கூட்டு தொடரில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் முப்பது மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. உலக அளவில் ஜனநாயகத்தின் தாயாக இந்தியா விளங்குகிறது. இந்தியாவின் உலக நாடுகளின் நன்மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது .


ஜி-20 மாநாட்டை நடத்தி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது இந்தியா .ஒரு தேசத்திற்கு இரண்டு அரசமைப்பு சட்டங்கள் இருக்கக் கூடாது .ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு சமூக நீதி வழங்கப்பட்டுள்ளது. நமது கலாச்சார பெருமைகளின் மரபாக நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்டுள்ளது .முத்தலாக் சட்டம் நீக்கப்பட்டதால் இஸ்லாமிய பெண்களுக்கு நீதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் புதிய சட்டங்கள் இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்துள்ளன" இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


SOURCE :Tamilnaduepaper.com

Next Story
கதிர் தொகுப்பு
Trending News