Kathir News
Begin typing your search above and press return to search.

தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக செயல்படும் தி.மு.க அரசை கண்டித்து தஞ்சையில் ஆர்ப்பாட்டம்

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளை தி.மு.க அரசு நிறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு பள்ளி பாதுகாப்பு கூட்டியக்கம் தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக செயல்படும் தி.மு.க அரசை கண்டித்து தஞ்சையில் ஆர்ப்பாட்டம்

Mohan RajBy : Mohan Raj

  |  7 Jun 2022 12:45 PM GMT

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளை தி.மு.க அரசு நிறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு பள்ளி பாதுகாப்பு கூட்டியக்கம் தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது.

கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் கொண்டு வந்த அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகளை தற்பொழுது தி.மு.க அரசு நிறுத்துவதாக அறிவித்துள்ளது, இதனை உறுதிப்படுத்தும் வகையில் அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்பு சேர்க்கைகளை இன்னமும் துவங்கவில்லை.

இந்த நடவடிக்கையின் காரணமாக தனியார் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் சேர்க்கை எண்ணிக்கை அதிகமாகி வருகிறது என்ற புகாருடன் தமிழக அரசு பள்ளிகள் பாதுகாப்பு கூட்டு இயக்கத்தினர் கூறி வருகின்றனர்.

மேலும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தமிழக அரசு இதுவரை அனுமதி அளிக்காதது கண்டிக்கத்தக்கது இந்த நடவடிக்கைகள் யாவும் தனியார் பள்ளிகளுக்கு சாதகமாகவும் அரசுப் பள்ளிகளுக்கு பாதகமாகவும் உள்ளதாகவும் பொதுமக்கள் மத்தியில் தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக அரசு பள்ளியை புறக்கணிக்கும் நிலை உருவாகியுள்ளது என ஐயப்பாடு எழுந்து உள்ளது எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகள் திறக்கும் நாளிலேயே தனியார் பள்ளிகள் திறப்பதற்கு நடவடிக்கை வேண்டும் எனவும் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பள்ளி பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் தஞ்சை பனகல் கட்டடத்தில் செயல்படுகின்ற மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Source - Tamil Indian Express

Next Story
கதிர் தொகுப்பு
Trending News