Kathir News
Begin typing your search above and press return to search.

டாஸ்மாக் மாதிரி வருமானம் வந்தாதான் வனத்துறையை கவனிப்பீர்களா? - தி.மு.க அரசுக்கு கொட்டு வைத்த நீதிமன்றம்

டாஸ்மாக் போல வருமானம் கிடைத்தால் வனத்துறை மீது அக்கறை காட்டுவீர்களா என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளது.

டாஸ்மாக் மாதிரி வருமானம் வந்தாதான் வனத்துறையை கவனிப்பீர்களா? - தி.மு.க அரசுக்கு கொட்டு வைத்த நீதிமன்றம்

Mohan RajBy : Mohan Raj

  |  1 July 2022 7:19 AM GMT

டாஸ்மாக் போல வருமானம் கிடைத்தால் வனத்துறை மீது அக்கறை காட்டுவீர்களா என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளது.

அன்னிய மரங்களை அகற்ற உத்தரவிடக் கூடிய வழக்கின் மீது நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு ஒன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வனத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், 'சத்தியமங்கலம் முதுமலை சரணாலயங்களில் 1500 ஹெக்டர் பரப்புக்கு அன்னிய மரங்கள் பரவி உள்ளன, இந்த மரங்களை போர்க்கால அடிப்படையில அகற்றாவிட்டால் நாட்டு மரங்கள் பாதிக்கும் அதனால இந்த மரங்களை அகற்ற தீவிர ஆலோசனை நடந்து வருகிறது' என கூறினார்.

மேலும் அன்னிய மரங்களை அகற்ற 536 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, அதேபோல் 100 நாள் வேலை உறுதி திட்ட நிதியை பயன்படுத்துவது குறித்து பரிசீலனை நடந்து வருவதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை கேட்ட நீதிபதிகள், 'அன்னிய மரங்களால் உள்நாட்டு மரங்கள் பலியாவதை ஒத்துக்கொள்ளும் அரசு அறிக்கை தாக்கல் செய்வதை தவிர வேறு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? அரசின் திட்டம் காகிதங்களில் தான் உள்ளது செயலில் எதுவுமில்லை. அன்னிய மரங்களால் வனத்துக்கும் வன விலங்குகளுக்கும் அச்சத்தில் உள்ளது இதனால் சரணாலயங்கள் எதிர்காலத்தில் அழிந்து விடும்' என கூறினார்.

Source - News 18 Tamil Nadu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News