Kathir News
Begin typing your search above and press return to search.

ஆரியர்களின் படையெடுப்பால் சிந்து சமவெளி நாகரிகம் அழிந்ததா.? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஆதாரம்.!

ஆரியர்களின் படையெடுப்பால் சிந்து சமவெளி நாகரிகம் அழிந்ததா.? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஆதாரம்.!

ஆரியர்களின் படையெடுப்பால் சிந்து சமவெளி நாகரிகம் அழிந்ததா.? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஆதாரம்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 Oct 2019 7:50 PM IST


ஆரியர்களின் படையெடுப்பால் சிந்து சமவெளி நாகரிகம் அழிந்தது என்ற மார்டிமர் வீலரின் கருத்துக்கு அரசியல் ஆர்வலர் நாராயணன் ஆதாரத்துடன் பதிலடி கொடுத்துள்ளார்.


இந்த
கேள்வியை இரு கட்டங்களாக பிரித்து தான் பதிலளிக்க முடியும். ஒன்று,
ஆரியர்களின் படையெடுப்பு உண்மையானதா? இரண்டு, சிந்து சமவெளி நாகரிகம் அழிய
காரணம் என்ன?


ஆரியர்களின் படையெடுப்பு உண்மையானதா?


இதற்கான
ஆதாரம் எதுவும் காணக்கிடைக்கவில்லை. நடை பெறாத ஒன்றை நடை பெறவில்லை என்று
நிரூபிக்க முடியாது. ஆரிய படையெடுப்பு நடை பெற்றது என்று எவரேனும்
நம்பினால், அதற்கான ஆதாரத்தை வழங்கினால் நன்று.


Y Haplogrouo R1a1 (வம்சாவளி) பழங்குடியினருக்கும் பிராமணர்களுக்கும் தொடர்பு உண்டு என்றே தெரிவிக்கிறது.


ஆதாரம்: இங்கே கிளிக் செய்க


சிந்து சமவெளி நாகரிகம் அழிய காரணம் என்ன?


நீரின்றி அமையாது உலகு. உலகில் தோன்றிய அணைத்து நாகரிகங்களும் நதிக்கரையில் தான் தோன்றியது. சிந்து சமவெளியும் அதற்க்கு விதிவிலக்கல்ல.நீர் ஆதாரம் மறைந்த போது மக்கள் அவ்விடத்தை விட்டு வெளியேறியதால் சிந்து சமவெளி அதன் மக்களை இழந்து பொலிவிழந்து.


இமையத்தில் தோன்றி இன்றைய தார் பாலைவனம் வழியாக சிந்து நதிக்கு இணையாக (parallel) ஓடிய சரஸ்வதி நதி குஜராத் மாநிலத்தின் Rann of Kutch என்னும் இடத்தில் கடலுடன் சங்கமித்தது. இன்று சரஸ்வதி நீரின்றி Rann of Kutch உப்பு பாலைவனமாக காட்சி அளிக்கிறது.


அழிவிற்கு காரணம்:


உலகின் நிலப்பரப்பு முதலில் ஒன்றாக இருந்தது (Pangaea), ஆப்பிரிக்கா, இந்தியா, அண்டார்டிகா மற்றும் ஆஸ்திரேலியா ஒட்டி இருந்தது, பின்னாளில் அவை சிதறுண்டு பல கண்டங்கள் தனித்தனியாக நகர்ந்து, அப்போது ஒரு தீவாக உலாவிய இந்தியா, பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு யூரோசியாவுடன் முட்டி மோதி இணைந்தது, இமயமும் உருவானது.


இந்தியா மற்றும் பாகிஸ்தானில் ஏற்படும் பூகம்பங்களும் இந்திய டெக்டோனிக் தட்டிற்கும் இருக்கும் ஒற்றுமையை கவனித்தீர்களா? இந்த இரு நாடுகளில் ஏற்படும் பெரும்பாலான பூகம்பங்கள் இந்தியா யூரேசியா உடன் ஒட்டிய பகுதிகளில் தான் நடக்கிறது. இன்றும் டெக்டோனிக் தகடுகலின் நகர்வால் இமயமலை மலை வருடத்திற்கு 1cm உயர்ந்துகொண்டிருக்கிறது.


இதே போன்று நடந்த ஒரு டெக்டோனிக் தகடுகலின் நகர்வால் சரஸ்வதி ஆறு தடம் மாறியது, சரஸ்வதி ஆற்றின் நீர், சட்லஜ் மற்றும் யமுனை நதியுடன் இணைந்தது. சரஸ்வதி ஆறு வற்றியதால் அதனை ஒட்டி இருந்த மக்கள் கிழக்கு நோக்கியும் (கங்கை) தெற்கு நோக்கியும் (நர்மதா) நகர்ந்தனர். சிந்து சரஸ்வதி நாகரிகம் அழிந்தது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News