Kathir News
Begin typing your search above and press return to search.

சரக்கு கப்பலில் சிக்கி இருந்த இந்திய பெண் மத்திய அரசால் பத்திரமாக மீட்பு!

சரக்கு கப்பலில் சிக்கி இருந்தா 17 இந்தியர்களில் ஒரு பெண் மீட்கப்பட்டுள்ளார். மீதி 16 பேரையும் மீட்போம் என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சரக்கு கப்பலில் சிக்கி இருந்த இந்திய பெண் மத்திய அரசால் பத்திரமாக மீட்பு!

KarthigaBy : Karthiga

  |  19 April 2024 2:27 PM GMT

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போர் நடந்து வருகிறது. சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வளைகுடா பகுதியில் சென்ற இஸ்ரேலுக்கு சொந்தமான சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்தது. விசாரணையில், கப்பலில் இருப்பவர்களில் 17 பேர் இந்தியர்கள் என தெரிய வந்தது.

இதற்கு இடையே சரக்கு கப்பலில் உள்ள 17 ஊழியர்களை மீட்கும் பணி நடந்து வந்தது .இந்நிலையில் கப்பலில் இருந்த இந்திய ஊழியர்கள் 17 பேரில் டெஸ்ஸா ஜோசப் என்ற பெண் விடுவிக்கப்பட்டார். கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த இவர் நேற்று பத்திரமாக நாடு திரும்பியதால் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கப்பலில் மீதமுள்ள 16 இந்தியர்களுடன் தொடர்பில் உள்ளோம் பாதுகாப்பாக இருக்கும் அவர்களை விரைவில் மீட்போம் என தெரிவித்துள்ளது.


SOURCE :Dinaseithi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News