Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியா 50 மாநிலங்களாக பிரியும், தமிழகம் இரண்டாகிறதா? - ஏன் கூறினார் கர்நாடக அமைச்சர்?

அடுத்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நாட்டின் மாநிலங்களின் எண்ணிக்கை 50 க்கு மேல் இருக்கும் என கர்நாடக அமைச்சர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா 50 மாநிலங்களாக பிரியும், தமிழகம் இரண்டாகிறதா? - ஏன் கூறினார் கர்நாடக அமைச்சர்?

Mohan RajBy : Mohan Raj

  |  24 Jun 2022 10:25 AM GMT

அடுத்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நாட்டின் மாநிலங்களின் எண்ணிக்கை 50 க்கு மேல் இருக்கும் என கர்நாடக அமைச்சர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் இந்தியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் வரவிருக்கிறது இந்த சூழலில் கர்நாடக அமைச்சர் ஒருவர் கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கர்நாடகாவின் உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் வனத்துறை அமைச்சராக இருக்கும் உமேஷ் கட்டி கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர் கூறியதாவது, 'அடுத்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நாட்டில் மாநிலங்களின் எண்ணிக்கை 50 க்கு மேல் இருக்கும் என சமூக ஊடகங்களில் ஒரு விவாதம் ட்ரெண்டாகி வருகிறது, எனவே கர்நாடக முழுவதும் உள்ள மக்கள் தொகை அடிப்படையில் வட கர்நாடகமும் தனி மாநிலமாக மாறும் என்பது உறுதி' என கூறினார்.

மேலும் பேசிய அவர், '2024 தேர்தலுக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடியை புதிய மாநிலங்களை உருவாக்குவார் மகாராஷ்டிரம், கர்நாடகம், உத்தரப் பிரதேசம் நான்கு மாநிலங்கள் ஆகவும் மாறும் இந்தியாவில் 50 மாநிலங்கள் உருவாகும். இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியே நடவடிக்கை எடுப்பார்.

பெங்களூரு நகரத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது, குடிமக்களுக்கு போதிய தண்ணீர் வசதி இல்லை பல மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்க வேண்டியுள்ளது. வட கர்நாடகாவுக்கு மிகப்பெரிய ஆற்றல் உள்ளது வட கர்நாடக மாநிலத்தை பெறுவதற்கு மக்கள் கைகோர்க்க வேண்டும் என பேசினார்' இவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Source - Junior Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News