Kathir News
Begin typing your search above and press return to search.

நின்றகோலத்தில் காட்சியளிக்கும் லட்சுமி நரசிம்மர் ஆலயம்

பொதுவாக லட்சுமி நரசிம்மர் எப்பொழுதும் அமர்ந்த கோலத்திலேயே காட்சி தருவார் . ஆனால் ஒரு திருத்தலத்தில் நின்ற கோலத்தில் இருக்கிறார்.

நின்றகோலத்தில் காட்சியளிக்கும் லட்சுமி நரசிம்மர் ஆலயம்
X

KarthigaBy : Karthiga

  |  21 Feb 2023 6:00 AM GMT

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகில் இருக்கிறது யாதகிரிகுட்டா என்ற இடம் . இங்கு லட்சுமி நரசிம்ம பெருமாள் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலயம் மற்ற நரசிம்மர் ஆலயங்களில் இருந்து வேறுபட்டு நிற்கிறது.


அதாவது பொதுவாக நரசிம்மர் ஆலயத்தில் அருள் பாலிக்கும் நரசிம்மர் யோக நரசிம்மர் ஆகவோ , உக்கிர நரசிம்மர் ஆகவோ, லட்சுமி நரசிம்மராகவோ எப்படி இருந்தாலும் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிப்பார். யோக நரசிம்மராக இருக்கும்போது இரண்டு கால்களையும் மடக்கி அமர்ந்த நிலையிலும் மற்ற நரசிம்மராக இருக்கையில் ஒரு காலை மடக்கி மற்றொரு காலை தொங்கவிட்ட நிலையிலும் காணப்படுவார்.


லட்சுமி நரசிம்மராக இருக்கும் பட்சத்தில் தன்னுடைய மடியில் லட்சுமி தேவியை அமர வைத்து காட்சி தருவார் . ஆனால் யாதகிரிகுட்டாவில் அருள் பாலிக்கும் லட்சுமி நரசிம்ம பெருமாள் நின்றகோலத்தில் அருள் பாலிக்கிறார். லட்சுமி தேவியானவர் நரசிம்மரின் இடது பக்கத்தில் அருகிலேயே நின்றகோலத்தில் இருக்கிறார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News