Kathir News
Begin typing your search above and press return to search.

மலைவாழ் சிறுமியைக் கடத்திய பாதிரியார்- கேள்விக் குறியான சிறுமியின் வாழ்க்கை.!

மலைவாழ் சிறுமியைக் கடத்திய பாதிரியார்- கேள்விக் குறியான சிறுமியின் வாழ்க்கை.!

மலைவாழ் சிறுமியைக் கடத்திய பாதிரியார்- கேள்விக் குறியான சிறுமியின் வாழ்க்கை.!
X

Shiva VBy : Shiva V

  |  18 Dec 2020 7:33 AM GMT

கடந்த வாரம் திருவண்ணாமலை ஜவ்வாது மலைப்‌ பகுதியில் அமைந்துள்ள பெருங்காட்டூர் என்ற மலைக் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரை பாதிரியார்‌ ஒருவர் கடத்தியதாக செய்தி வெளியானது. ஜெயராஜ் என்ற பாதிரியார் பெருங்காட்டூர் மலைக் கிராமத்தில் சமூக சேவை புரிவதாகக் கூறிக் கொண்டு மத போதனை செய்து வந்துள்ளார்.

கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், குழந்தைகளுக்கு தனது வீட்டில் பாடம் சொல்லிக் கொடுப்பதாகக் கூறி அழைத்துள்ளார். அப்போது சிறுமியரிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இது பெற்றோருக்கு தெரிய வந்த பின் பெரும்பாலானோர் குழந்தைகளை பாதிரியார் வீட்டுக்கு அனுப்புவதை நிறுத்தி உள்ளனர்.

சில குழந்தைகள் மட்டும் தொடர்ந்து சென்று வந்த நிலையில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி ஒருவர் கடந்த அக்டோபர் 24 அன்று காணாமல் போனார். மலையில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்ற போது தான் பாதிரியாரையும் காணவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அவர் தனது குழந்தையைக் கடத்தி விட்டதாக சிறுமியின் தந்தை ஜமுனாமரத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகார் அளித்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் சிறுமி கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து தனது மகளை மீட்டுத் தருமாறு சிறுமியின் தந்தை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். பாதிரியார் வேளாங்கண்ணியில் இருப்பதாகத் தெரிந்து போலீசார் அங்கு சென்று பார்த்த போது அவர் தப்பி விட்டது தெரிய வந்தது.

பின்னர் சகோதரி பரிமளா தேவியின் வீட்டில் பாதிரியார் சிறுமியை மறைத்து வைத்திருப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கு சென்று சோதித்த போது அங்கிருந்தும் பாதிரியார் சிறுமியுடன் தப்பிச் சென்று விட்டார். சிறுமியைக் கடத்தவும் மறைத்து வைக்கவும் உதவிய பாதிரியாரின் சகோதரி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

சிறுமியை கண்டுபிடிக்க முடியாத வேதனையில் தந்தை நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். ஆனால் அதற்கும் மசியாத பாதிரியார், தனது சகோதரி ஜாமீன் கிடைக்காமல் ஜெயிலில் அவதிப்படுவதை அறிந்து ஜாமீன் கிடைக்க வேண்டும் என்பதற்காக சிறுமியை யாருக்கும் தெரியாமல் பெருங்காட்டூரில் விட்டுச் சென்றுள்ளார்.

பாதிரியார் தன்னை பெங்களூருவில் உள்ள ஒரு இல்லத்துக்கு அழைத்துச் சென்றதாக சிறுமி கூறிய போதும், சந்தேகத்தின் பேரில் பாதிரியார் அவரை மூளைச்சலவை செய்து இவ்வாறு பேசச் செய்திருக்கிறாரா என்றும், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தாரா என்றும் விசாரணை நடந்து வருகிறது. மலைவாழ் மக்கள் கடுமையான சமூகக் கட்டுப்பாடுகளைக் கடை பிடிப்பவர்கள். எனவே சிறுமி ஒரு மாதத்துக்கும் மேல் பாதிரியாருடன் காணாமல் போனது அவரது வாழ்வை கேள்விக் குறியாக்கும் என்று அவரது பெற்றோர் அஞ்சுகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News