Kathir News
Begin typing your search above and press return to search.

பா.ஜனதா வெளியிட்ட 40 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல்!

நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலை பா.ஜனதா வெளியிட்டுள்ளது.

பா.ஜனதா வெளியிட்ட 40 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல்!

KarthigaBy : Karthiga

  |  29 March 2024 3:47 AM GMT

நாடாளுமன்றத் தேர்தலில் பீகாரில் பா ஜனதா 17 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 17 வேட்பாளர்கள் பெயர்களும் கடந்த 24 ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. தற்போதைய எம்.பிக்களில் 14 பேருக்கு அவரவர் தொகுதிகளில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மத்திய மந்திரி அஸ்வினி குமார் உட்பட மூன்று பேருக்கு சீட் தரப்படவில்லை.இந் நிலையில் பீகாருக்கான பாஜக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டது. அதில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, கட்சி தலைவர் ஜே.பி நட்டா உத்தர பிரதேச மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உட்பட 40 பேர் இடம் பெற்றுள்ளனர்.

ராணுவமந்திரி ராஜ்நாத் சிங் மத்திய மந்திரிகள் நிதின் கட்காரி நித்யானந்தராய் ,மத்திய பிரதேச மாநில முதல் மந்திரி மோகன் யாதவ், பீகார் துணை முதல் மந்திரிகள் சாம்ராஜ் சவுத்ரி, விஜயகுமார் சின்கா மற்றும் ரேணுதேவி, மங்கள் பாண்டே பிரேம்குமார், நீரஜ் குமார் சிங், சையது ஷா நவாஸ், சுசில் குமார், மோடி உள்ளிட்டோர் நட்சத்திர பேச்சாளர்கள் ஆவர் .அவர்கள் பீகாரில் பாஜகவுக்கு வாக்கு சேகரிப்பார்கள்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News