இந்தியா கொடுத்த கடன் பணமும் காலி: வறுமையில் சிக்கி தவிக்கும் இலங்கை அரசு!
By : Thangavelu
இலங்கையில் தற்போது மிகப்பெரிய பொருளாதார நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் ஒரு வேளை உணவின்றி தவித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு மக்களும் அதிபர் மற்றும் பிரதமர் உடனடியாக பதவிவிலக வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பெட்ரோல், பால், காய்கறி, அரிசி உள்ளிட்டவைகளின் விலை மும்மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீதியில் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். சாப்பாடு இல்லாமல் பலர் இந்தியா நோக்கி வருவதையும் காணமுடிகிறது.
இதனிடையே இந்தியா அளித்த கடன் வேகமாக தீர்ந்து வரும் நிலையில் இலங்கையில் இம்மாத இறுதியில் இருந்து டீசல் இல்லாத நிலை ஏற்படுகின்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இது பற்றி இலங்கை அரசு அதிகாரிகள் கூறும்போது, இந்தியாவில் இருந்து இலங்கைக்கு ஏப்ரல் 1ம் தேதி வரையில் எரிபொருள் வர உள்ளது. ஆனால் அதற்கு முன்பே இந்தியாவில் இருந்து எரிபொருள் வந்து கொண்டிருக்கிறது. இதனை இந்திய அரசு நிறுத்திவிட்டால் இலங்கையில் எரிபொருள் முற்றிலும் தீர்ந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இந்தியா அளித்த கடனும் தீர்ந்து வருகின்ற காரணத்தால் இலங்கை அரசு மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது என்றார்.
Source, Image Courtesy: Daily Thanthi