கோவில் சொத்து வருமானத்தை வசூலித்தால் தமிழ்நாட்டிற்கே பட்ஜெட் போடலாம் - நீதிமன்றம் கூறிய பரபரப்பு கருத்து
கோவில் சொத்துக்களை முறையாக வசூலித்தால் தமிழக அரசு பற்றாக்குறை இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
By : Mohan Raj
கோவில் சொத்துக்களை முறையாக வசூலித்தால் தமிழக அரசு பற்றாக்குறை இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
கோவில் சிலைகள் மற்றும் நகைகள் பாதுகாப்பு தொடர்பாக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்த வழக்கில் 75க்கும் மேற்பட்ட வழிகாட்டுதலை வழங்கி உத்தரவிட்டுள்ளது, அவற்றின் 38 உத்தரவுகளை அமல்படுத்தி விட்டதாகும் ஐந்து உத்தரவுகள் மாநில அரசு தொடர்பில்லாதது எனவும் 32 உத்தரவுகளில் மறு ஆய்வு செய்ய வேண்டுமென தமிழக அரசு சார்பில் மறு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசன் குழு அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்த பொழுது இந்து சமய அறநிலைத்துறை தரப்பில் வழக்கறிஞர் அருள் நடராஜர் ஆஜராகி உயர்நீதிமன்றம் பதிப்பித்த உத்தரவின் அடிப்படையில் பழமையான கோவில்கள் பரணமிக்கப்பட்டு வருவதாகவும், அதற்கான பணியில் கோவில்கள் செயல் அலுவலர்கள், பொதுப்பணித்துறை என நேரடியாக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பின்னர் அவரின் அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கோவில் எடுக்கும் முடிவுகளை மற்ற துணை அமைப்புகள் ஏற்க வேண்டும் எனவும் அறநிலை துறை பணிகளில் குழுக்கள் தலையிடாது எனவும் தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் இறுதியாக அறநிலையத்துறை கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் மூலம் வருகின்ற வருவாயை முறையாக வசூலித்தால் தமிழக அரசால் பற்றாக்குறை இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்ய முடியும் என நீதிபத்திகள் உறுதிப்பட தெரிவித்தனர். இதனை அடுத்து இந்த வழக்கு விசாரணை மூன்று வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.