எந்த நாட்டிலாவது இப்படி நடக்குமா? முன்னாள் பிரதமரை கொலைசெய்தவர், பறை அடித்து கொண்டாட்டம் போடுகிறார்! ஊடகங்கள் அவரை தியாகி ஆக்குகிறது!
எந்த நாட்டிலாவது இப்படி நடக்குமா? முன்னாள் பிரதமரை கொலைசெய்தவர், பறை அடித்து கொண்டாட்டம் போடுகிறார்! ஊடகங்கள் அவரை தியாகி ஆக்குகிறது!
By : Kathir Webdesk
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகளில் ஒருவரான பேரறிவாளன் ஒருமாத பரோலில் வெளியே வந்துள்ளார்.
அவர் தனது சகோதரியின் மகள் திருமண விழாவில் கலந்து கொண்டு பறை அடித்து உற்சாக வெள்ளத்தில் ஆட்டம் போட்டார்.
முன்னாள் பிரதமரை கொலை செய்த கொலையாளி பேரறிவாளன். ஆனால் அவரை ஏதோ ஒரு சுதந்திர போராட்ட தியாகி போல, அனைத்து பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் வெட்கமே இல்லாமல் முக்கியத்துவம் கொடுத்து தூக்கி பிடித்து வருகிறது. இவர் தமிழர் என்பதால் இப்படி தூக்கி பிடிக்கிறார்கள் என்றால், முன்னாள்பிரதமர் ராஜீவ் காந்தியுடன் 18 பேர் செத்தார்களே அவர்கள் யார்? தமிழக ஊடங்கள் எந்த திசையை நோக்கி செல்கின்றன? அவர்களின் நோகம்தான் என்ன? தேச விரோதம் மட்டும்தான் இலக்கா?
இது எத்தகைய ஊடக தர்மம் என்பது தெரியவில்லை. அவர் எதற்காக சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார் என்பதைகூட தலைகீழாக மாற்றி, இந்த நாட்டிற்காக மிகப்பெரிய தியாகத்தை செய்ததுபோலவும், அதற்காக அவர், ஜெயில் தண்டனை அனுபவித்து வருவது போலவும் ஒரு பிம்பத்தை ஊடகங்கள் திட்டமிட்டு கட்டமைத்து வருகின்றன.
பத்திரிகை நண்பர்கள் என்ற போர்வையில் ஈவேராவின் பேத்திகள் பனிமலர் உள்பட பலரும் இதில் கலந்து கொண்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் கொஞ்சம்கூட கூச்சமே இல்லாமல், பேரறிவாளனை கட்டித்தழுவி செல்பி எடுத்துள்ளனர்.
இப்படி ஒரு கொலையாளிக்கு, அதுவும் ஒரு முன்னாள் பிரதமரை கொலை செய்த கொலையாளிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து அவரை கொண்டாடுவது எந்த கையை பத்திரிகை தர்மம்? இப்படிப்பட்ட பத்திரிகையாளர்களிடம் இருந்து எத்தகைய நடுநிலையை தமிழ் சமுதாயம் எதிர்பார்க்க முடியும்? என்பதுதான் இந்த நாட்டை நேசிக்கின்ற தேசபக்தர்கள் ஒவ்வொருவரின் கேள்வியாக உள்ளது.