Kathir News
Begin typing your search above and press return to search.

பத்தாயிரம் கோடி செலவில் 70 பயிற்சி விமானங்கள் 3 கப்பல்கள் வாங்க ராணுவ அமைச்சகம் ஒப்பந்தம்

ரூபாய் 10,000 கோடி செலவில் 70 பயிற்சி விமானங்கள் மூன்று பயிற்சி கப்பல்கள் வாங்க ராணுவ அமைச்சகம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. கப்பல்கள் சென்னை அருகே காட்டுப்பள்ளியில் கட்டப்படுகின்றன.

பத்தாயிரம் கோடி செலவில் 70 பயிற்சி விமானங்கள் 3 கப்பல்கள் வாங்க ராணுவ அமைச்சகம் ஒப்பந்தம்

KarthigaBy : Karthiga

  |  8 March 2023 11:45 AM GMT

ராணுவ அமைச்சகம் நேற்று இரண்டு முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. இந்திய விமான படைக்கு எச்.டி.டி 40 ரகத்தைச் சேர்ந்த 70 அடிப்படை பயிற்சி விமானங்களை வாங்க பொதுத் துறை நிறுவனத்தின் லிமிடெட் நிறுவனத்துடன் கையெழுத்திட்டது. 6800 கோடி செலவில் இந்த விமானங்கள் வாங்கப்படுகின்றன. இவை குறைந்த வேகத்தில் கையாள கூடியவை.


விமானிகள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு பயிற்சி அளிக்க பயன்படுத்தப்படும்.இந்த விமானங்களில் 60% வரை உள்நாட்டு உதிரி பாகங்கள் பயன்படுத்தப்படும். படிப்படியாக ஆறு ஆண்டுகளில் எல்லா விமானங்களும் ஒப்படைக்கப்படும். இதுபோல் மூன்று பயிற்சி கப்பல்கள் வாங்க எல் அண்ட் டி நிறுவனத்துடன் ராணுவ அமைச்சகம் ஒப்பந்தத்தில் கையெதிட்டது. ரூபாய் 3,100 கோடி செலவில் இவை வாங்கப்படுகின்றன. கடற்படை பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் ஆண் பெண்களுக்கு அடிப்படை பயிற்சிக்கு பிறகு இந்த கப்பல்களில் பயிற்சி அளிக்கப்படும்.


அண்டை நாடுகளின் கடற்படை வீரர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படும். மேலும் பேரிடர் காலங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் பயன்படுத்தப்படும். சென்னை அருகே காட்டுப்பள்ளியில் உள்ள எல் அண்ட் டி கப்பல் கட்டும் தளத்தில் கப்பல்கள் கட்டப்படும். கப்பல்களை ஒப்படைக்கும் பணி 2026 ஆம் ஆண்டில் இருந்து தொடங்கும். விமானம் கப்பல் கட்டும் பணியில் சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று ராணுவ அமைச்சகம் கூறியுள்ளது.


ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் முன்னிலையில் இரு ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டன .பாதுகாப்பு செயலாளர் கிரிதர் அரமானே மற்றும் அமைச்சக உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர் . கடந்த ஒன்றாம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய மந்திரி சபை கூட்டத்தில் இந்த கொள்முதலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News