இந்தியாவின் பொருளாதாரத்தை உலக அளவில் உயர்த்துவதே எங்கள் இலக்கு- பிரதமர் மோடி!
உலக பொருளாதாரத்தில் இந்தியாவை ஐந்தாவது இடத்திலிருந்து அடுத்த இடத்திற்கு நகர்த்துவது எங்களது குறிக்கோள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
By : Karthiga
சுவிட்சர்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து மற்றும் லிச்செஜ்டீன் ஆகிய நான்கு நாடுகளில் இருந்து ஐரோப்பிய தடையற்ற வர்த்தக சங்கத்தை உருவாக்கியுள்ளன. இந்த அமைப்புடன் தடையற்ற வர்த்தகம் மேற்கொள்வதற்கு இந்தியா பேச்சு வார்த்தை நடத்தி வந்தது. இதன் பலனாக தற்போது ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் எனப்படும் இந்த ஒப்பந்தம் மூலம் ஏற்பட்ட நான்கு நாடுகளும் இந்தியாவில் 15 நாடுகளுக்கு மேல் முதலீடு செய்யும் என மத்திய வர்த்தக மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஐரோப்பிய தடையற்ற வர்த்தக சங்கத்துடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தம் நாட்டின் முதல் நவீன தடையற்ற வர்த்தக ஒப்பந்தமாகும். இது நியாயமான மற்றும் சமநிலை ஆனது .இந்த ஒப்பந்தம் மூலம் அடுத்த 15 ஆண்டுகளில் சுமார் 100 மில்லியன் டாலர் அளவுக்கு மேற்படி நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு அந்நிய நேரடி முதலீடு கிடைக்கும். இதன் மூலம் இந்தியாவில் லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான உறுதி ஏற்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை 16 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கினாலும் கடந்த 9 முதல் 10 மாதங்களாக தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஒப்பந்தத்தால் ஐந்து நாடுகளும் பயனடையும். இதை வர்த்தக சமூகம் வரவேற்று இருக்கின்றது .இவ்வாறு கோயல் கூறினார் .மோடி அரசு கொண்ட மூன்றாவது வர்த்தக ஒப்பந்தம் இதுவாகும் .முன்னதாக அமீரகம், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 4 ஐரோப்பிய நாடுகளுடனும் ஒப்பந்தத்தை பிரதமர் மோடி பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
2024 ஆம் ஆண்டு மார்ச் 10-ஆம் தேதி இந்தியாவுக்கும் ஐரோப்பிய தடையற்ற வர்த்தக சங்க நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு விரைவில் ஒரு புதிய திருப்பம் மற்றும் சிறப்பு மிக்க தருணமாக அமைந்துள்ளது. இந்த ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தையாளர்கள் மற்றும் கையெழுத்து போட்டவர்கள் அனைவருக்கும் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள். இந்த நாடுகளுக்கு சாத்தியமான அனைத்து ஆதரவுகளையும் இந்தியா வழங்கும். தொழில் மற்றும் வணிகங்களை எரிதாக்கும் உறுதியான இலக்குகளை அடைவதற்கு மட்டுமின்றி அவற்றைத் தாண்டி செல்லவும் இது உதவும்.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் ஒரு புதிய பாய்ச்சலை எடுத்துள்ளது. உலகின் 11 வது பொருளாதாரத்தில் இருந்து ஐந்தாவது பெரிய பொருளாதாரத்திற்கு நகர்ந்து இருக்கிறது. இந்தியாவின் பொருளாதாரத்தை உலக அளவில் உருவாக்குவதே எங்களது அடுத்த இலக்கு ஆகும். இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் மோடி கூறி இருந்தார்.
SOURCE :DAILY THANTHI