370 நீக்கிய பிறகு 9 ஆயிரம் கோடி - காஷ்மீரின் முன்னேற்றத்திற்காக செலவழித்த மோடி தலைமையிலான அரசு
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு மாநிலத்தின் பாதுகாப்பு திட்டங்களுக்காக இதுவரை 9,120 கோடி ரூபாய் மத்திய அரசு செலவிட்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
By : Mohan Raj
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு மாநிலத்தின் பாதுகாப்பு திட்டங்களுக்காக இதுவரை 9,120 கோடி ரூபாய் மத்திய அரசு செலவிட்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்கவும், நாட்டின் எல்லை பாதுகாப்பிற்காகவும், ஜம்மு-காஷ்மீரில் உச்சபட்ச ராணுவ பாதுகாப்பு எப்பொழுதுமே இருக்கும். மேலும் தீவிரவாத செயல்கள், நக்சல் செயல்களால் பொதுமக்கள் பாதிப்படைவது, பொது சொத்துக்கு சேதம் விளைவிக்கும் விதத்தில் குண்டுவெடிப்புகள், துப்பாக்கிச் சூடுகள் அடிக்கடி நடைபெற்று அமைதி என்பதே என்னவென்று தெரியாத நிலையில் இருந்த காஷ்மீருக்கு பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பதவி ஏற்றபின் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்து யூனியன் பிரதேசமாக அறிவித்தார்.
இந்திய அரசியலமைப்பு சட்டம் 370 மற்றும் 37 ஏ பிரிவை பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 2019ஆம் ஆண்டு மோடி தலைமையிலான அரசு நீக்கியது. மாநில சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது மட்டுமல்லாமல் மாநிலமாக இருந்து ஜம்மு காஷ்மீர் லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்கள் ஆக மாற்றி மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள 2020ம் 21 ஆம் ஆண்டு அறிக்கையின் மூலம் இந்திய அரசு ஜம்மு காஷ்மீர் லடாக் ஆகிய பகுதிகளுக்கு பாதுகாப்பு தொடர்பான செலவுகள் திட்டத்தின்கீழ் 9,120 கோடியே ரூபாய் வழங்கியுள்ளது என தெரியவந்துள்ளது. மேலும் ஜம்மு காஷ்மீர் பிரிக்கப்பட்ட 2019'ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான செலவிடப்பட்ட 447 கோடி ரூபாயும் இதில் அடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் 370 நீக்கிய பிறகு ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்காக இவ்வளவு பணம் செலவிடப்பட்டது அம்மாநில மக்கள் மீதான அக்கறையை மத்திய அரசு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என்பது இதன் மூலம் தெரிகிறது.