அடுத்த அதிரடி இராமர் கோவில் தான்! அமித் ஷா வின் மாஸ்டர் பிளான் ரெடி!
அடுத்த அதிரடி இராமர் கோவில் தான்! அமித் ஷா வின் மாஸ்டர் பிளான் ரெடி!
By : Kathir Webdesk
நாடு முழுவதும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருவது காஷ்மீர் விவகாரம். சட்ட திருத்தம் கொண்டு வந்து ஒரு நாள் முடியவில்லை அதற்குள்ளாக அடுத்த அதிரடிக்கு தயாராகி விட்டார் உள்துறை அமைச்சர் அமித் ஷா, அடுத்து மேற்கொள்ள உள்ள நடவடிக்கைகள் குறித்து, பா.ஜ.க வட்டாரங்கள் கூறியதாவது:பா.ஜ.க வின் தேர்தல் அறிக்கையில் கூறியபடி காஸ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து என கூறியிருந்தனர் அதுபோல் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கினார். அடுத்தது ராமபிரான் பிறந்த இடமான அயோத்தி நகரில், ராமர் கோவில் கட்டுவது, பா.ஜ.,வின் தாரக மந்திரமாக உள்ளது.
ராமர் கோவில் கட்டுவதற்கு லட்சக்கணக்கான இந்துக்கள, பா.ஜ.,வுக்கு ஆதரவாக உள்ளனர். மக்களின் விருப்பத்தை உள்துறை அமைச்சர், அமித் ஷா விரைவில் நிறைவேற்றுவார்.தற்போது ,ராமர் கோவில் பிரச்சனை, உச்ச நீதிமன்றத்தில் வழக்ககா உள்ளது இதனால்தான் , எவ்விதஅதிரடி நடவடிக்கை எடுக்க முடியாமல் உள்ளது. மக்களைவையில் , பா.ஜ.க வுக்கு இருக்கும், பெரும்பான்மையை வைத்து, சட்டம் இயற்ற உள்ளதாக தகவல் வெளியாகியள்ளது. விரைவில் வழக்கை முடிக்க ஒரு மனுதாக்கல் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ராமர் கோவில் காட்டும் பணிகள் தொடங்கப்பட வாய்ப்புகள் உள்ளது அதற்கான அதிரடி நடவடிக்கைகள் தயாராக உள்ளது.
இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களுக்குள், பக்கத்துக்கு நாடான பங்களாதேஷிலிருந்து ,ஏராளமானோர், சட்ட விரோதமாக குடியேறியுள்ளனர். அவர்களை வெளியேற்ற,
தேசிய குடிமக்கள் பதிவு முறை, விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.இதே போல் , பாகிஸ்தான் மற்றும் ஆப்கன் நாடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட ஹிந்துக்களுக்கு, இந்தியாவில் புனர்வாழ்வு அளிக்கும் வகையில், அமித் ஷாவின் அடுத்த அதிரடி நடவடிக்கை இருக்கும்.
அடுத்த சட்டம்
பொது சிவில் சட்டம் ஒரே நாடு! ஒரேசட்டம்! என்ற மசோதாவை அடுத்த பாராளுமன்ற கூட்ட தொடரில் நிறைவேற்றப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.