Kathir News
Begin typing your search above and press return to search.

துபாயில் வசமாக அகப்பட்டுக் கொண்ட 'மகாதேவ்' ஆன்லைன் சூதாட்ட செயலியின் உரிமையாளர்!

மகாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர் ரவி உப்பல் துபாயில் கைது செய்யப்பட்டார். இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

துபாயில் வசமாக அகப்பட்டுக் கொண்ட மகாதேவ் ஆன்லைன் சூதாட்ட செயலியின் உரிமையாளர்!

KarthigaBy : Karthiga

  |  14 Dec 2023 9:15 AM GMT

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்த மகாதேவ் என்ற ஆன்லைன் சூதாட்ட செயலி நடத்தப்பட்டு வருகிறது. அதன் உரிமையாளர்கள் ரவி உப்பல், சௌரத் சந்திராகர் ஆவர்.இவர்கள் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர்கள். பல்வேறு நபர்களுக்கு உரிமங்கள் கொடுத்து அவர்கள் மூலமாக செயலி நடத்தப்படுகிறது. உரிமை பெற்றவர்களுக்கு லாபத்தில் 30 சதவீத பங்கு அளிக்கப்படுகிறது. விளம்பரம் கொடுத்த வகையில் பெருமளவு பணம் செலவழிக்கப்பட்டுள்ளது.


சட்டவிரோதமாக சூதாட்டம் நடத்தியதன் மூலம் இந்நிறுவனம் ரூபாய் 6000 கோடி சம்பாதித்ததாக கூறப்படுகிறது. ஹவாலா முறையில் வெளிநாட்டு வங்கி கணக்குகளில் பணம் பதுக்கப்பட்டதாகவும் தெரிகிறது. மகாதேவ் செயலின் மீது சதீஷ்கர் மாநில போலீசாரும் மும்பை போலீசரும் விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் இவ்விவகாரத்தில் நடந்த சட்ட விரோத பண பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது.


மகாதேவ் செயலி உரிமையாளர்களுக்கு எதிராக ராய்ப்பூரில் உள்ள கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் சூதாட்ட செயலி மூலம் பணம் திரட்டுவது, அதை பதுக்குவது, சதீஷ்கர் மாநில அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் பணம் வழங்குவது ஆகிய வேலைகளை ரவி உப்பல் கவனித்து வந்ததாக அமலாக்கத்துறை கூறியிருந்தது. சத்தீஸ்கர் மாநில முதல் மந்திரி ஆக இருந்த பூபேஷ் அவர்களுக்கு சூதாட்ட செயலி உரிமையாளர்கள் 58 கோடி கொடுத்ததாக ஆசிம்தாஸ் என்ற ஊழியர் திடுக்கிடும் தகவல் அளித்தார்.


இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை வேண்டுகோளின் பேரில் ரவி உப்பலுக்கு எதிராக சர்வதேச போலீஸ் ரெட் நோட்டீஸ் வெளியிட்டது. இந்த நோட்டீஸ் அடிப்படையில் துபாயில் ரவி உப்பலை துபாய் போலீசார் பிடித்து தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். அதைத்தொடர்ந்து துபாய் போலீசாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்பு கொண்டனர். ரவி உப்பலை இந்தியாவுக்கு நாடு கடத்திக்கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News