Kathir News
Begin typing your search above and press return to search.

சனி கிரகமும் அதன் துணைக்கோள்களும்!

சனி கிரகமும் அதன் துணைக்கோள்களும்!

சனி கிரகமும் அதன் துணைக்கோள்களும்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 Jan 2020 6:53 AM GMT


சனி கிரகமானது சூரியனை 6 வது சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வருகிறது. சனி கிரகத்தின் பல
ஆச்சரியமான விஷயங்களை விளக்குகிறது இந்த கட்டுரை.
வானியலார் கலிலியோ கலிலி இந்த சனி கிரகத்தைத் தொலைநோக்கி வாயிலாகப் பார்த்த போது
வியந்து போனார். சனி கிரகம் அழகிய வளையங்களையும் , அழகான தோற்றத்தினையும்
கொண்டது.


சனி கிரகம் சூரிய குடும்பத்தில் இரண்டாவது மிகப் பெரிய கோள் ஆகும். இதன்
நிலநடுக்கோட்டுப் பகுதியில் 1,20536 கிலோமீட்டர் சுற்றளவு கொண்டது. இவ்வளவு பெரியதாக
சனி கிரகம் இருந்தாலும் பூமியை விட 95 மடங்கு மட்டுமே எடை கூடியதாக உள்ளது. சனி
கிரகமானது பூமியை விட 764 மடங்கு அதிக கொள்ளளவு கொண்டது. அதாவது 764 பூமிகளை
சனி கிரகத்திற்குள் உள்ள அடக்கிவிட முடியும். இத்தகைய சனி கிரகமானது பூமியை விட 8
மடங்கு அடர்த்தி குறைவானது.



சனி கிரகமும் அதன் துணைக்கோள்களும்!


சூரியக் குடும்பத்தின் கோள்களை அடர்த்தியைப் பொறுத்து வகைப்படுத்தினால், பூமியானது
அதிக அடர்த்தி கொண்டதாகவும், சனி கிரகமானது வெகு குறைந்த அடர்த்தி கொண்டதாகவும்
இருக்கும். பூமியின் ஒரு நாள் ஆனது 24 மணி நேரங்களை கொண்டிருந்த போதிலும் சனியின் ஒரு
நாள் ஆனது 10 மணி 32 நிமிடங்களைக் கொண்டிருக்கும். சனிக்கோள் வாயுக்களால்
ஆக்கப்பட்டதாக உள்ளது. சனியின் மேற்பரப்பு மிக வேகமான புயல்களைச் சந்திக்கிறது.
சூரியகுடும்பத்தில் வெகு வேகமாக அதாவது மணிக்கு 1800 கிலோமீட்டர் வேகத்தில் புயல்கள்
இங்கு வீசுகின்றன. சனி கிரகமானது 82 துணைக் கோள்களைக் கொண்டது. சனி கிரகத்தின்
மிகப்பெரிய நிலவு டைட்டன் ஆகும்.



சனி கிரகமும் அதன் துணைக்கோள்களும்!


சனியின் துணைக்கோள்கள் ஒரே புகைப்படத்தில் காணக்கிடைக்கிறது.
இவற்றில் Dione, Enceladus, Mimas மற்றும் Tethys ஆகிய துணைக்கோள்கள் இங்கு
காணக்கிடைக்கின்றன.


நம் மக்கள் மனதில் அறிவியல் தாண்டி சனிகிரகம் மீது ஒரு பயம் நிலவுகிறது. சனி கிரகம் என்றால்
அது ஏதோ மக்களுக்கு துன்பம் விளைவிக்கக் கூடிய ஒரு விஷயம் என்பதாக மக்கள் கருதி
வருகின்றனர். சனி கிரகத்தை அறிவியல் ரீதியாகப் பார்க்கும்போது அக்கிரகம் பல
ஆச்சரியங்களை உள்ளடக்கியதாகக் காணப்படுகிறது.
எனவே சனி கிரகத்தை பார்த்து பயம் கொள்ளாமல் அறிவியல் ஆச்சரியமாகத் தரிசியுங்கள்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News